ஓரை பார்த்து நிச்சயித்து ===கண் இமைக்கா கனவோடு காரைபூசிக் கட்டிய வீட்டில் ===வழிதவறிக் குதித்துத் தாவும் தேரை நுழைய விரட்டிடுவாரதன் ===நீர் பட்டவிடம் மெலியுமென ! நரித்தனமாய் சிந்தித்து திட்டமிட்டு ===காரியத் தடைகள் செய்வோரை தரித்திரமாய் தன்னோடே வைத்திட்டு ===புறப்படத் தயாராவார் எங்கேனும் உரித்தான அவ்வேளை பூனையொன்று ===குறுக்கிட நிற்பார் அபசகுனமென ! வெட்டிக்கதைகள் பேசி குற்றங்கண்டு ===தன் வாயிட்டு மெல்லுகையில் எட்டிபார்க்கும் மூலையிலோர் பல்லி ; ===அதுதன் பயணவழி ஆராய்கையில் சுட்டித்தனமாய் உச்சுக்கொட்ட சகுனமென ===தேடிடுவாரதன் பலனாவது யாதென ! எச்சிலாய் மிஞ்சியதைக் கண்டதும் ===எங்கோ போகும் காக்கையோ உச்சியில் உட்கார்ந்து கரையும் ===தன்நோக்கம் குறிப்பால் உணர்த்த ; மெச்சியதனைக் கண்டு நகைப்பர் ===உறவினர் வரும் அறிகுறியென ! அதிகாலைப் பொழுது அவசரகதி ===அந்நாள் அவசியமோ துரிதபடுத்த குதிகாலும் வலிக்கும்படியே நின்று ===தயாராகி சாலையில் இறங்கினால் விதியென முகம்சுழித்து திரும்பிடுவார் ===என் விரிகூந்தலும் சகுனத்தடையாம் ! ###################### (புலமி)


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வைகள் : 78
3
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே