திருமண ஆசை காட்டி 60-க்கும் அதிகமான பெண்களை மோசடி செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்த ஆசாமியை பீகார் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் சமஸ்டிப்பூர் மாவட்டத்தை செர்ந்தவன் முகம்மது சிஸாம்(30). ரெயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றுவதாக கூறி வந்த இவன், வைஷாலி மாவட்டம், பஹவ்தின்பூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டான். அந்த சிறுமியை காணவில்லை என்று அவளது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பல்கான் காவல் நிலைய போலீசார், மாயமான சிறுமியின் செல்போனுக்கு வந்த பழைய அழைப்புகளின் அடிப்படையில் சமஸ்டிப்பூர் மாவட்டத்துக்கு சென்று முகம்மது சிஸாமை கைது செய்தனர். அவனிடம் இருந்த 4 செல்போன்களையும், 8 சிம் கார்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், பல்கான் போலீஸ் நிலையத்துக்கு அவனை அழைத்து வந்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, 4 செல்போன்களிலும் மாறி, மாறி ஏகப்பட்ட அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. எதிர் முனையில் பேசிய அனைத்து பெண்களும் தாங்கள் முகம்மது சிஸாமின் மனைவி என்று கூறியதால், தலை சுற்றிப் போன போலீசார், அவர்கள் ஒவ்வொருவருக்கும் மீண்டும் போன் செய்து போலீஸ் நிலையத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அடிப்படையில், சம்ப்ரான் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்த முகம்மது சிஸாம் அங்கு மட்டும் 8 பெண்களை திருமணம் செய்து, அவர்கள் அனைவரையும் தவிக்க விட்டு 2004-ம் ஆண்டு தலைமறைவாகி விட்டான். பின்னர், ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி, ரெயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றுவதாக கூறி 60-க்கும் மேற்பட்ட பெண்களை இவன் நாசப்படுத்தியுள்ளான். எந்த பெண்னை அடைய விரும்புகிறானோ..? அதற்கு தகுந்த மாதிரி தனது மதத்தையும் பெயரையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளும் அவனது இனிப்பான பேச்சில் இளம் பெண்கள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோரும் மயங்கி விடுவது உண்டு. இவர்களில் பல பெண்களை தாயாக்கி விட்டு, ஏதேதோ பொய் காரணங்களை கூறி அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விடுவான். பல நாளாக கணவனை காணவில்லையே.. என்று மனைவி மார்கள் போன் செய்தால், டிக்கட் பரிசோதிக்கும் பணியில் பிசியாக இருப்பதாகவும், விடுமுறை கிடைக்கவில்லை என்றும் சாக்குப் போக்கு சொல்லி ஏமாற்றி விட்டு, எப்போதாவது ஞாபகம் வந்தால் இரண்டு அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறை ‘ஒரு பேஷண்டை டாக்டர் சென்று பார்ப்பது போல்’ வந்து சந்தித்து விட்டு மீண்டும் தலைமறைவாகி விடுவான். நாங்கள் அழைத்ததன் பேரில், இது வரை இவனை தனது கணவன் என்று உரிமை கொண்டாடி 15 பெண்கள் குழந்தைகளுடன் வந்து சேர்ந்துள்ளனர். இன்னும் பல பெண்கள் கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், பீகாரின் இதர மாவட்டங்களில் இருந்தும் வந்துக் கொண்டிருக்கின்றனர் என போலீசார் தெரிவித்தனர். ’போகிற போக்கை பார்த்தால்.. இவன் திருமண விஷயத்தில் ‘செஞ்சுரி’யை தாண்டியிருப்பான் போல் இருக்கிறது’ என்று ஒரு போலீஸ் அதிகாரி வேடிக்கையாக குறிப்பிடுகிறார். "இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வைகள் : 120
2
Close (X)




புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே