எழில் சோம பொன்னுசாமி- கருத்துகள்
எழில் சோம பொன்னுசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- மலர்91 [19]
- ஜீவன் [19]
அன்பு நண்பரே நன்றிகள் !
ஒரு கவிதைத்தொகுப்பு நூலுக்கும் இது
பயன்படும் என்றே நன்னூலில் இருந்து
எடுத்து வழங்கினேன்!
தமிழன்புடன் ,
எழில்
தங்களுக்கு சூட்டப்படும்
தங்கமலர் மாலையில்
என்னுடைய மலர் வாழ்த்தாக
அமையட்டும் !
வாழ்த்துகள் !
thamizhanbudan
எழில் .
நீங்கள் பாடிய அறம்பாடல்
பலிக்கட்டும் !
கொடும்பாவி அரசு அழியட்டும்
அவன் உருத்தெரியாமல் சாம்பலாகட்டும்!
தமிழன்புடன்
எழில்
எதிர்பாட்டு ==எதிப்பாட்டு
தவறுக்கு வருந்துகிறேன்.
எழில்
அன்புள்ள எசக்கியல் ஐயா ,வணக்கம் !
நல்ல ஆரோக்கியமான எதிப்பாட்டு !
நம்பிக்கை வையுங்கள் !
எல்லா தேனீக்களும்
தேனைப் பருக வரும் !
மலரில் மணம்
இருந்தால்,
எல்லா கரைகளுக்கும்
அலைகள் வரும்
காந்த சக்தி இருந்தால்
எழுத்துகள் கூடி
மொழியை
விலக்கிவைக்கக்
கூடுமோ?
வளமான மொழியென்றால்
காலம் கடந்து வாழும்
வாழ்க!
தங்கள் எதிர்ப்பாட்டு !
கருத்துகளுக்கு யாரும் பூட்டுப் போடுவதில்லை!
சரிதானே ?
தமிழன்புடன்
எழில்
,
அன்புள்ள அகன் !
வாழ்த்துகள் !
இது ஒருவகையான உளவியல் கவிதை !
முதல் கேள்வியில் , பதில் நேர்மறையாகவும்
மற்ற அனைத்துக்கேள்விகளுக்கும் எதிர்மறையான பதிலைத் தந்திருப்பது ,தங்களின் வாதத்திறைமைதான் !
கொஞ்சம் மாற்றியும் யோசித்துப்ப் பார்க்கலாம் !
இது உங்களின் எண்ணத்தில் தலையிடுவதாக என்ன வேண்டா!
நட்புரிமையுடன் என்கருத்தினைப் பதிக்கிறேன் !
கவிதையின் ஓட்டம் ,கருத் அணிவகுப்பு
வெகு சிறப்பாக அமைந்துள்ளது
எந்த எழுத்தை
மொழி நீக்கிவிட்டதோ
அதுவே ,,,
எனபது கருத்து நெருடலாக உள்ளது
இந்தக் கருத்து உயர்வுநவிற்சியா?
விளக்கம் தரவும்
தமிழன்புடன்
எழில்
அன்புள்ள அழகர்சாமி வாழ்க!
கிராமக்கலைகள் இன்று அழியும் தருவாயில் உள்ளன,
இதை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனில்
நம் இல்லத்தில் நடக்கும் விழாவிற்கு கிராமக்கலைகள் தெரிந்த கலைஞர்களைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் .
திருமணங்களில் திரை இசைப் பாடல்களை மேடையில் அரங்கேற்றுவதற்குப் பதிலாக ,மயிலாட்டம் ,கரகாட்டம் ,ஒயிலாட்டம் ,சிலம்பாட்டம் போன்ற அரிய கிராமியக் கலைகளை
பயன் படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் .
மேலும் ,அரசாங்கமே இக்கலைகளுக்கு நல்ல வரவேற்புக் கொடுக்க வேண்டும் .
அரசு விழாக்களில் கட்டாயம் இது போன்ற கலைகளுக்கு
முன்னுரிமைத்தர வேண்டும்
அரசு அதிகாரிகள் மனது வைத்தால்
கிராமியக்களைகளை வாழவைக்க முடியும் எனபது ஏன் நம்பிக்கை
நல்ல கவிதை படைத்த அழகர்சாமிக்கு
என்வாழ்த்துகள்
வளர்க ,கலைகளை வளர்க்க,
நீங்கள் தூண்டுகோலாக இருங்கள் !
நன்று,
தமிழன்புடன்
எழில்,.
அன்புள்ள ஐயா ! வாழ்க! வளர்க!!
வண்ண மலர்களைக் கட்டி
வைக்கும் நார் இந்த எழுத்து !
எண்ணங்களை இணையத்தில்
ஏற்றும் தேர் எழுத்து !
தெள்ளிய ஆற்று நீர் அமைதியோடும்
உள்ளத்தில் பெருக்கெடுக்கும் கவிதை
அள்ளிவழங்கிய ஐயா வாழ்கவே!
தமிழன்புடன் ,
எழில்
அன்பு முகமது பாரூக் ! தங்களின் வாழ்த்து
மனதுக்கு இதமாக இருக்கிறது
நன்றி!
தமிழன்புடன்,
எழில்
அன்புமிக்க திரு .ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.!
தத்துவம் நிறைந்த சிறந்த கவிதை !
மனம் இன்னும் அடங்கவில்லை
மதி ஒடுங்க உறங்கவில்லை !
அருமை !
வாழ்த்துகளுடன் ,
எழில்
அன்பு அய்யா பழனிகுமார் !
மனம் மகிழ்கிறது
தங்களின் அன்பான வாழ்த்துகள் அளித்தது கண்டு !
நன்றி!நன்றி !
தமிழன்புடன் ,
எழில்
அன்புடையீர் வணக்கம்!
தங்களின் அருமையான கவிதை
மனதுக்கு அமைதியையும் மகிழ்வையும் தருகிறது !
நன்றிகள் !
தமிழன்புடன் ,
எழில்
ஆமாம் ஐய்யா !
திருத்தம் செய்து விட்டேன்
நன்றி ,நன்றி !
தமிழன்புடன் ,
எழில்
அருமையான கவிதையிலே
என்னை நான் மறந்தேன் ஐயா !
நன்றிகள் உரித்தாக்குகிறேன் !
தமிழன்புடன்
******எழில்******
தருதலாக = தவறுதலாக எனப் படிக்கவும்
அன்புள்ள குமரிக்கு வாழ்த்துகள் !
இது போன்ற கவிதை உரையாடல்
சங்க காலத்திலே நடந்ததாக என்
ஆசிரியர் கூறியிருக்கிறார்
இப்போதும் இது தொடருவது மனத்துக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது
தொடரட்டும் !
முற்றிய கதிர்
இதையே தலைப்பாகக் கொண்டு
கவிதைப் படைக்கலாமே!
நன்றி ,
தமிழன்புடன் ,
எழில்
செந்தமிழ் ஊற்றுநீர் !சிந்தனைச் செம்மல் நீர்!
பைந்தமிழ்ப் பா வடிக்கும் பாவலர்நீர்!
தமிழால்த் தவிப்பை அடக்க முடியுமா ?
தரமான கவிதையின் உரிமைக்காரறேநீர்!
நன்றி
தமிழன்புடன்,
எழில்
அருமையான வெண்பா
திரு .எசக்கியேல் எழுதியுள்ளார்
தருதளாக தங்களின் கருத்தில் பதிந்து விட்டேன்
பதிலுக்கு தாங்களும் ஒரு வெண்பா
படைத்து விடுங்களேன் !
நன்றி ,
தமிழன்புடன் ,
எழில்
தங்களின் வரிகள் எனக்கு மிகுந்த
ஆறுதல் தருகிறது
நன்றி ,
தமிழன்புடன் ,
எழில்
பாவரங்கில் சீரிய கருத்துகளை
வடிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன்
நன்றி
தமிழன்புடன்
ezhil