கொஞ்சம் படிச்சேன்
தமிழதுக் கொஞ்சம் படிச்சேன்.
அமிழ்தமதுத் துளிக் குடிச்சேன்.
தத்தித்தொத்திக் கவி வடிச்சேன்.
பித்தனையும் விஞ்சத்துடிச்சேன்..
தமிழதுக் கடலென்பார்;
தரைக் கண்டாரெவன்பார்.
தேடத்தேடப் புதையலென்பார்;
தேவைக்கெலாம் வள்ளலென்பார்.
எட்டித்தொடப் பார்க்கிறேன்.
எட்டவில்லை முயல்கிறேன்.
கிட்டும் வரைத் தொடருவேன்.
கெட்டிக்கவி ஆகுவேன்.
வள்ளுவனைக் கம்பனைப் பாரதியை :
கொள்ளுகிறேன் நெஞ்சந்தனை!
துள்ளியுந் தாள்களைத் தொடத்தானை :
தவழுகிறேன் பாவம்! நான் மழலை !
மனம் இன்னும் அடங்கவில்லை.
மதி ஒடுங்க உறங்கவில்லை.
இனம் புரியாத் தேடும் நிலை.
விதி அதுவோ அடையுங்கலை!
எதை நான் தேட வேண்டும்?
என்னதான் சொல்ல வேண்டும்?
ஞானம் கொண்டு முயல வேண்டும்..
நான் இன்னும் பயில வேண்டும்.
முன்மொழியும் புலம்பலெலாம்;
முடிவுரைக்குச் சாட்சிகளாம்.
பின்விளையும் அதன் நிறைவாம்;
என்னச் சொல்ல வந்தேனென்றும்.
கொண்டு வந்தது ஒன்றுதான்;
கொழுந்தான ஞானம்தான்.
கண்டு இங்குச் செழித்ததுதான்;
நின்று புவி வாழும் நான்!
இட்டு வந்த இறைவனவனவன்;
இதயத்துள்ளே இருப்பவன்.
விட்டு வரச் சொல்லுவான்;
விதைத்த என் சொற்களை நான்!
சொல்ல வந்ததுச் சொல்லத்தான்;
சுதந்திரம் எனக்குத்தான்.
கொள்ள வேறு இல்லைதான்;
கொடுப்பான் சிவ பதவிதான்.
ஒன்றொன்றாய்ப் படியேறி
நன்றொன்றாய் நான் தேறி
கண்டொன்றாய்க் கடைக் கூறி
சென்றொன்றாய் ஆம் மாறி.
கொ.பெ.பி.அய்யா.