பொங்கல் கவிதை போட்டி- கருத்துகள்

போட்டி சிறப்பாகவும், செம்மையாகவும் நடைபெற எனது மாமனார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியை நடாத்தியவன் என்ற ரீதியில் உங்களிடம் ஒரு கோரிக்கை.
இறுதி முடிவுகள் மூலம் மதிப்பிற்குரிய நடுவர் குழாத்தினர் அங்கீகரித்த படைப்புகளுடன், நீங்கள் குறிப்பிடவரும் தெரிவு செய்யப்படாத தரமான கவிதைகளை ஒப்பிட்டு ஒரு அறிக்கை சமர்ப்பியுங்கள்.

அவ்வாறு முடியவில்லையேல் தங்களின் இந்த எண்ணப் பகிர்வு "அவதூறு செய்யும் நோக்கில்" எழுதப்பட்ட எண்ணம் என்ற ரீதியில் நாங்கள் புறக்கணித்துவிடுவோம்.

இந்த கருத்திற்கு பதிலிட. மூன்று மணித்தியாலம் அவகாசம் தருகின்றேன். இந்த மூன்று மணித்தியாலத்திற்குள் ஆக்கப் பூர்வமாய் நீங்கள் பதிலிடாவிட்டால் உங்களது புகார் வெறும் அவதூறாக மட்டும் கணிப்பிடபட்டு நிராகரிக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன் !
-KS Kalai

அவ்வாறே இருக்கின்றன..ஏதேனும் பிழைகள் இருப்பின் தனிவிடுகை அனுப்புங்கள் தோழரே !

வணக்கம் தோழர்களே....

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்....

இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் !

வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்.....

அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்....

அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான
=============திருமதி.“சியாமளா ராஜசேகர்” =============

சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்


மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி
=============திருவாளர். ஜின்னா அவர்கள் ! =============

திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் !


இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும்
படைப்பாளிகள்....!
============================
சாதி ஒழி! மதம் அழி! சாதி!

• முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய்
============================
இப்படி நாம் காதலிப்போம்

• முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498
============================
நாளைய தமிழும் தமிழரும்

• முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய்
• இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய்
• மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய்
============================
பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம்.

தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் !

இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...!

வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் !

வணக்கம் தோழர்களே....

தைப்பொங்கல் கவிதைத் திருவிழா மெதுமெதுவாய் நகர்ந்து இறுதி கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கின்றது தற்போது.

முதற்கண்-போட்டியில் பங்குபற்றி விழாக்குழுவினரை பெருமைப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய சிரந்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் !

ஒரு போட்டி நடாத்தப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதை அறிவோம். போட்டி நடாத்துவதனால் போட்டி நடாத்தும் செயற்குழுவினருக்கு பல்வேறு பிரதிபலன்கள் இலாபங்கள் வந்து சேரும் என்பதும் வெளிச்சம்.

ஆனால் இந்த கவிதைத் திருவிழா என்ற செயற்றிட்டத்தை ஒரு மாதகாலமாய், பல்வேறு இடர்களுக்கு சிக்கல்களுக்கு மத்தியில் வேலைப்பளுவினையும் புறக்கணித்து நடாத்தி முடித்திருக்கின்றோம் என்பதில் மொத்த விழா குழுவினரும் பெரும் திருப்தி அடைகின்றோம்.

மூன்று தலைப்புகள் வழங்கப்பட்டு அதன் மூலம் பத்தொன்பது படைப்பாளிகளுக்கு பணம் மற்றும் ஆறுதல் பரிசில்களை வழங்க தீர்மானித்திருந்தோம்.

“நடுவர் தீர்ப்பு” என்ற தொடரின் மூலம் இந்த விழாவில் நாம் எதிர்பார்த்த விடயங்கள் பற்றியும் நாம் பெற்றுக் கொண்ட விடயங்கள் பற்றியும் நடுவர்கள் வாயிலாகவே சொல்லி இருந்தோம். இந்த படைப்புகள் அனைத்தையும் படைப்பாளிகள் அனைவரும் மீள மீள வாசித்து தம்மைப் பட்டைத் தீட்டிக் கொள்ளவேண்டும் என்பது எங்களது அன்புகலந்த அக்கறையுடனான வேண்டுகோளாகும் !

முன்னூறுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்குபற்றிய இந்த போட்டிகள் நான்கு கட்டங்களாக பரிசீலிக்கப் பட்டன. அவற்றுள் மிகச் சிறந்த கவிதைகள் ஒன்பது இறுதி முடிவுகளுக்குள் இருக்கின்றன.

ஏதோ ஒரு சில காரணங்களால் கடைசி ஒன்பது கவிதைகளுக்குள் இடம்பிடிக்க முடியாத கவிதைகளுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்க முன்வருகின்றோம்.

அந்தவகையில் மூன்று தலைப்புகளிலும் எழுதப்பட்டிருந்த படைப்புகளில் நடுவர்களின் தீர்ப்பின் படி தெரிவு செய்யப்பட்டுள்ள ஆறுதல் பரிசு பெறும் படைப்பாளிகள் இவர்களே.....

1. 228676 - vivekbarathi (இ)
2. 229198 - உமை (சா)
3. 228283 - saravanaa (நா)
4. 229317 - ரோஷான் ஏ.ஜிப்ரி (இ)
5. 228341 - மணியன் (இ)
6. 227954 - இராஜ்குமார் Ycantu (இ)
7. 227691 - Sujay Raghu (நா)
8. 227998 - இணுவை லெனின் (சா)
9. 229102 – யாழ்மொழி (சா)
10. 227705 - ஜாக்.ஜி.ஜெ (சா)
---------------------------------
இ – இப்படி நாம் காதலிப்போம்
நா – நாளைய தமிழும் தமிழரும்
சா – சாதி ஒழி! மதம் அழி! சாதி !
---------------------------------
ஆறுதல் பரிசுபெறும் படைப்பாளிகள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி கெளரவிக்கின்றோம். இந்த படைப்பாளிகள் பத்து பேரும் தங்களது வீட்டு முகவரியினையும் தொலைபேசி இலகத்தினையும் மதிற்பிற்குரிய தோழர் அகன் அவர்களுக்கு தனிவிடுகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.

நீங்கள் தளத்தின் உறுப்பினரே !
மூன்று கட்டமாக பிரித்து கவிதைத் தேர்வுகள் நடாத்தப்படும் என்பதையே "13" கூறுகின்றது !

போட்டி குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு உங்களது படைப்பை "மற்ற போட்டிகளுக்கு" என்ற இடத்தில் சொடுக்கி பதிவேற்றுங்கள் !
இந்த கணக்கிற்கு விடுகை செய்யுங்கள் !

பொங்கல் கவிதைப்போட்டி 2015 ற்கான ஆக்கங்களை இந்த கணக்கிற்கு விடுகை செய்யுங்கள்.

படைப்பின் கீழ், அனுப்பப்படும் படைப்புகளுக்கு தானே முழு உரிமையாளர் என்ற உறுதிப்படுத்தலுடன், தமது பெயர், வயது, வதிவிடம், நாடு மற்றும் அழைப்பிலக்கம் போன்றவற்றை படைப்புடன் இணைத்து விடுகை செய்தல் வேண்டும்.(கட்டாயமானது)

மிக அருமையான பதிவு தோழரே....

''உணவு'' - இதுதான் இந்த உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் கண்டிப்பாக தேவை.- இதற்க்கு விவசாயம் மட்டுமே ஒரே வழி. விஞ்ஞான வளர்ச்சியினால் விவசாயத்தை காப்பாற்ற முடியாது, ஏனென்றால் இயற்கையோடு ஒன்றி இயற்கையாகவே வாழ்ந்தால் மட்டுமே விவசாயம் நிலைக்கும், மனித ஆயுள் நீடிக்கும்.

இயற்கையை விழுங்கிக்கொண்டு இருக்கும் விஞ்ஞானத்தால் இயல்புநிலை மரணித்து, உலகம் அழிவின் இக்கட்டில் நிர்கதியாய் நிற்கிறது.

அருமையாக சொல்லிடிங்க தோழரே

அந்த காலத்து பாட்டி வைத்தியம் - இந்த கால பாட்டிகளுக்கு தெரியவே தெரியாது, ஏன்னா, இது கலிகாலம், விஞ்ஞான உலகம்னு எல்லோரும் சொல்லுறாங்க. வர்மக்கலையையும், வைத்தியக்கலையையும், யோகசனங்களையும், கோல்சுழற்சி சாஸ்திரங்களையும் தமிழன்தான் கண்டுபிடித்தான், விமானத்தையும் கண்டுபிடித்தான்........... ஆனால் அது எல்லாம் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டதாக பெருமையடித்துக் கொள்கிறார்கள்.......! தமிழனுக்கு என்று ஒரு நிலையான சுய உரிமைகொண்ட கொஞ்ச நிலம் இருந்து இருந்தால்.... நமது முன்னோர்கள் நமக்காக கண்டுபிடித்த பல அரியவகை மூலிகைகளும், விஞானங்களும், தற்காப்புகளைகளும் இன்று வேறு எவனுக்கோ சொந்தமானதாகி இருக்காது. நமது மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் அழிவின் விளிம்பில் இன்று அல்லாடிக்கொண்டு இருந்து இருக்காது. லட்சக்கணக்கான அப்பாவி உயிர்களையும் இழந்து இருக்கமாட்டோம். இந்தியாவை ஆள்வதே வட இந்தியகாரர்களகாத்தான் வழக்கமாக இருந்துகொண்டே இருக்கிறார்கள், குடி தண்ணீர் இல்லாமல் நாட்டின் கடைசி கோடியில் நாம் குமுறிக்கொண்டு இருக்கிறோம். தமிழனின் பெருமை திட்டமிட்டே மூடிமறைப்பது வழக்கமாகிவிட்டது. நமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மொழி ஆட்சி மொழியாக இருக்கையில், அந்த ஆட்சியின் ஆளுமையில் நாம் பிடிபட்டு இருக்கையில் என்ன செய்ய முடியும்......நல்லவர்களும் அரியணை ஏறுவது இல்லையே.......!

மறக்க முடியாத நினைவு
வடுக்களான பின்னும்
வலித்துக்கொண்டே இருக்கிறது.....!

படைப்பு அருமையாக இருக்கிறது தோழர்......

வணக்கம் தோழமைகளே....

தாங்களின் அன்பான ஆதரவோடு பொங்கல்விழா கவிதைபோட்டி சிறப்பாக நடந்து முடிந்ததில் மிகுந்த சந்தோசம் அடைகிறோம்...!

இந்த கவிதை போட்டியின் நோக்கம் உங்களை எழுத தூண்டும் உந்து சக்தியாக இருப்பதும், சிறப்பான படைப்பாளிகளை அனைவருக்கும் அறிமுகம் செய்வதுமே ஆகும், அப்போ நாங்கள் எல்லாம் சிறப்பான படைப்பாளிகள் இல்லையா என்று யாரும் கேட்க வேண்டாம், ஏனென்றால் உங்களுக்கான அரங்கேற்றங்கள் உங்களுக்காகவே காத்துகொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை, களத்தில் நீங்கள் அனைவரும் நின்றீர்கள், உங்களில் சிலர் முன்னே வருகிறார்கள், நீங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறீர்கள் உங்கள் இலக்கை நோக்கி,- நிச்சயமாக நாளை நீங்களும் உங்களுக்கான இடத்தை நிரப்புவீர்கள் என்று நம்புகிறோம்.

2012, 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு போட்டிகளில் பரிசினை வென்றவர்கள் பட்டியல்...!
1.ரமேஷாலம்
2.கோவை ஆனந்த்
3.மோசே
4.சுகன்யா
5.நிலவை பார்த்திபன்
6.ஜோசப் ஜூலியட்
7.ரவிச்சந்திரன்
8.மலைமன்னன்

இந்தமுறை புதியதாக மூன்றுபேர் இந்த பட்டியலில் இணைய போகிறார்கள், அவர்கள் யார் என்பதை அறிய நீங்களும் காத்திருக்கிறீர்கள், இதோ கூறிவிடுகிறோம்...!

1.முதல் பரிசு வென்ற படைப்பு
*********************************************
!!!சமத்துவப் பொங்கல் பொங்கணும்!!!

மாற்றான் சிரமதில் மணிமுடி சூடி
==மறவன் என்றவன் புகழ்தினம் பாடி
போற்றும் நிலையதன் கதவுகள் மூடி
==புதுமை சரித்திரம் படைப்பதை நாடி
காற்றில் புயலாய் தமிழின மெழுந்து
==காலில் செருப்பாய் கிடப்பதைத் தவிர்த்து
ஆற்றல் வளமுள ஊற்றாய்ச் சுரந்து
==அவனியி லுரிமை பொங்கல் பொங்கணும்.

சிதறியத் தேங்காய்த் துண்டெனத் தமிழினம்
==சிதைத்திடச் செய்தவர் நகைப்பினைக் கண்டும்
பதறிடா திருந்திடும் மனநிலைக் கொண்டு
==பலிக்கடா போலவே வாழ்வதை விடுத்து
கதறியக் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து
==கடலினில் நீராய் ஓரிடம் சேர்ந்து
முதலிடம் தமிழன் முகவரி யாகிட
==முனைவது தமிழரின் மூச்செனக் கொள்வோம்

பன்னிரு கோடிகள் சனத்தொகை மிகுந்த
==பழங்குடி தமிழினம் ஐக்கியம் தொலைத்து
தன்னிறை வெய்திடா திருப்பத னாலொரு
==தனித்துவ மிழந்துத் தரணியில் இன்னும்
பின்னடை வடைந்து செல்வதைத் தடுத்து
==பின்வரும் சந்ததி கைகளில் தமிழின்
சந்நிதி வாசலின் திறவுகோல் கொடுத்து
==சமத்துவப் பொங்கல் வைப்பது அவசியம்!


---எழுதியவர் - மெய்யன் நடராஜ் (இலங்கை)

இரண்டாம் பரிசுக்குரிய படைப்பு
*********************************************
!!!உலவும் நிலவே ஓடிச்சொல்!!!

நேற்றிருந்தாய் இன்றில்லையே வெண்ணிலாவே - அந்த
நீலவிண்ணின் ஓரத்திலே வெண்ணிலாவே
தோற்றி விட்டால் பொன்னிலங்கி மின்னிடுவாயே - இன்று
தேயவைத்தே யார் மறைத்தது கூறு நிலாவே
காற்றும் மேனி தொட்டுமாலை சென்றிடும் வேளை - நீயும்
காதல்மனம் கனிய வைப்பாய் வந்திடுநாளை
சாற்றுவதை யாரிடத்தில் சொல்லிடுவேனோ - இச்
சங்கதியை அங்கிருந்தே கேட்டிடுவாயோ

வீற்றிருந்தார் மன்னர் குலம் செந்தமிழ்தானே - அன்று
வீடுமனை கோவில் கட்டித் தந்ததனாலே
நாற்று நட்டு நெல்லுடைத்துத் தின்றவர்வாழ்வு- அற்றை
நாளிலொரு சொர்க்கமென்றே கண்டது ஊரே
தூற்றிமக்கள் தீயழிக்க செய்தவர்யாரோ - அவர்
தெய்வத்தமிழ் கொல்ல மனம் தீதுகொண்டாரோ
ஏற்றி வைத்த தீபமெல்லாம் எங்கே நிலாவே - இங்கு
இருள்மிகுந்தே உயிரழிந்த தேது சொல்லாயோ

ஆற்றினிலே வெள்ளம்வரப் படகினில் நாமே - அதில்
அலையடிக்க இடையில்நின்று சுழன்றடித்தோமே
மாற்றமில்லை போகுந்திசை ஒன்றெனவாகி - நாம்
மனமெடுத்தே துடுப்பசைத்திட வேண்டும்நிலாவே
வேற்றுமையாய் நாம் நடந்திடில் பொன்னின்நிலாவே - நாம்
வீற்றிருப்பது கூற்றுவன் கரம் ஆகும்.

-------கிரிகாசன்.

மூன்றாம் பரிசு வென்ற படைப்பு
***********************************************
!!!தமிழனென்றால் உரைக்கணும் புத்தி!!!

ஆதியில் தோன்றி அகிலத்தை ஊன்றி
நீதியில் வாழ்ந்த நீதாண்டாத் தமிழன்,
பாதியில் வந்த பகடையர்க்குரிமை
பகிர்ந்தளித்தாயே அதில் நீ வழுக்கன்!

பாரினிலெவனும் பரிதவித்தாலும்
முதற்கண் சிந்திடும் மூத்தவன் தமிழன்,
ஆரிறுகோடி சிதைந்ததனாலே
அடிமையான அவலன் தமிழன்!

நாகரிகத்தை உலகிற்களித்தாய்
நல்லறிவினையே குறளில் உதிர்த்தாய்,
வீரக்காவியம் நீயும் படைத்தாய்
செம்மொழி இலக்கணம் நயமாய் வடித்தாய்!

மண்ணை உழுது விதையை விதைத்தாய்
மனதை உழுது மனிதம் விதைத்தாய்,
ஏட்டை உழுது பாட்டை விதைத்தாய்
எதிரியை உழுது வெற்றிகள் படைத்தாய்!

அகிலம் போற்ற வாழ்ந்த தமிழன்
ஒற்றுமையற்று உடைந்ததனாலே
மூத்தகுடியோ தாழ்ந்தது இன்று
முகவரிகூட தொலைந்தது இழுக்கு!

தமிழ்த்தாய் என்றால் பிறக்கணும் பக்தி
தமிழனென்றால் உரைக்கணும் புத்தி
உலகை ஆள இருக்குது சக்தி
ஒன்றாய் வாழ்ந்து அடைந்திடு முக்தி!


---சிவகாவிய தாசன்.

மற்ற அனைத்துப்படைப்புகளுமே வாழ்த்துக்குரிய படைப்புகள் ஆகும், சொன்னக் கருவை ஆழமாக உள்வாங்கி அதை உணர்வாக கவித்துவமான நடையில் சிறப்பாக படைப்புகளை தந்த இந்த மூவரும் பரிசு வென்றவர்கள் பட்டியலில் இணைகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்

=========================
மிக சிரமப்பட்டு மொத்த படைப்புகளையும் சலித்து தலா இருபது இருபது படைப்புகளை சிறப்பாக தேர்வு செய்த முதல் கட்ட நடுவர்கள்.

உயர்திரு கோவை ஆனந்த் அவர்கள்
உயர்திரு K . S கலை அவர்கள்
============================
அவர்கள் தேர்வு செய்த 40 படைப்புகளையும் 20 20 தாக பிரித்து பல நடுவர்களுக்கு அனுப்பினேன், அவர்கள் அதை சல்லடை போட்டு சலித்து மிக சிறப்பான 20 படைப்புகள் தந்தார்கள். அப்படி சிறப்பாக பணியாற்றிய இரண்டாம்கட்ட நடுவர்கள்....

உயர்திரு கே பி அய்யா அவர்கள்
உயர்திரு ஜோசப் ஜூலியட் அவர்கள்
திருமதி சொ. சாந்தி அவர்கள்
திருமதி தாரகை அவர்கள்

==========================
இரண்டாம்கட்ட நடுவர்கள் தேர்வில் கிடைத்த 20 படைப்புகளை 10 10 ஆகா பிரித்து, மூன்றாம்கட்ட நடுவர்களுக்கு அனுப்பி அதில் இருந்து சிறப்பான 6 -- 6 படைப்புகளை தேர்வு செய்து தரும்படி கூறினேன், அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு, படைப்புகளை ஆழமாக ஆராய்ந்து தலா 6 மொத்தம் 12 படைப்புகளை தந்தார்கள், அப்படி சிறப்பான பணியாற்றிய நடுவர்கள்.

உயர்திரு நிலவை பார்த்திபன் அவர்கள்
உயர்திரு வெள்ளூர் ராஜா அவர்கள்

===============================
தேர்வாகிய 12 சிறந்த படைப்புகளையும், சிறப்பு தேர்விற்காக சிறப்பு நடுவர்களுக்கு அனுப்பினேன், அதில் 6 படைப்புகளை தேர்வு செய்து தர சொன்னேன். அவர்களும் 12 படைப்புகளையும் ஆராந்து சிறப்பாக செயல்பட்டு சிறந்த 6 படைப்புகளை தேர்வு செய்து தந்தார்கள்,

உயர்திரு அகன் அவர்கள்
உயர்திரு பொள்ளாச்சி அபி அவர்கள்

==================================
சிறப்பு தேர்வில் தேர்வாகி வந்த 6 படைப்புகளையும் (கவிஞர் ,புகழ் பெற்ற மெய்ப்பு நோக்கு அறிஞர் ,பதிப்பகத்தார்.) உயர்திரு விழி. தி .நடராஜன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரால் 6 ல் மூன்று சிறப்பான படைப்புகளை தேர்வு செய்யப்பட்டது.

============================
அந்த மூன்று படைப்புகளும் .(புகழ் பெற்ற் துளிப்பா படைப்பாளி) புதுவை. தமிழ் நெஞ்சன்(புதுக்கவிதை படைப்பாளி ) உயர்திரு சீனு தமிழ்மணி அவர்களுக்கு அனுப்பி- ஒன்று, இரண்டு, மூன்று என தரம் பிரிக்கப்பட்டது, பிறகே இந்த இறுதி அறிவிப்பு தாங்களின் மேற்பார்வைக்கு சமர்பிக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமைகளே பரிசு வென்ற படைப்பாளிகளை உங்கள் மனதார பாராட்டுங்கள் அவர்களின் மனம் மகிழட்டும்,

முயற்ச்சியையும் பயிர்ச்சியையும் கைவிடாது தொடர்ந்து நமது பயணத்தை துவங்குவோம், அடுத்த இலக்கை நோக்கி.

நன்றிகள் தோழமைகளே...
இப்படிக்கு
திருவிழாக்குழு.

குறிப்பு;-
பரிசை வென்ற படைப்பாளிகள் தங்கள் இல்ல முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவைகளை தனி விடுகையில் உடனே அனுப்பும்படி வேண்டுகிறோம்,

''எங்களுக்கு களம் தந்த எழுத்து தளத்திற்கு எங்கள் திருவிழாக்குழுவின் சார்பாக எங்கள் முதற்கண் நன்றியினை என்றும் உரித்தாக்குகிறோம்''.

எங்களோடு இணைந்து போட்டியினை சிறப்பித்ததற்கு நன்றிகள்.

எங்களோடு இணைந்து போட்டியினை சிறப்பித்ததற்கு நன்றிகள்.

எங்களோடு இணைந்து போட்டியினை சிறப்பித்ததற்கு நன்றிகள்.

முதல்கட்ட தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது, அதன் பிறகு இரண்டாம் கட்ட தேர்வுகள், மூன்றாம்கட்ட தேர்வுகள் முடிந்த பிறகே... இறுதி முடிவுகள் இந்த மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் அதுவரை பொறுமை காக்கவும், எங்களோடு இணைந்து இந்த போட்டியினை சிறப்பித்ததற்கு நன்றிகள்.

பொங்கல் கவிதைப் போட்டியில் பங்கேற்றுக் கொண்ட அனைத்து தமிழ் உறவுகளுக்கும் விழா குழுவினரின் மனமார்ந்த நன்றிகள் !

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கவிதைகள் நடுவர் குழுவிற்கு அனுப்பபடுகிறது !

கவிதை ஏற்றுக் கொள்ளுதல் இத்துடன் நிறைவடைகிறது !

சுபம் !

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு எழுதபட்டிருக்கும் அனைத்து கவிதைகளுமே போட்டிக்கு தகுதியானையாகும், அவைகள் நடுவர்களின் மேற்பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்படும், அதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம்.

மிக்க நன்றிகள்,

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைக்கு உட்பட்டு எழுதப்பட்டிருக்கும் அனைத்துப் படைப்புகளுமே நடுவர்களின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நன்றிகள்....


பொங்கல் கவிதை போட்டி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே