Kaleeswaransvks- கருத்துகள்

பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 67 கவிதைகள் வந்தன. அதில் வேதியியல் தொடர்பான கவிதைகள் 26 தேர்ந்தெடுக்கப்பட்டு ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேரிடம் கொடுக்கப்பட்டது. அவர்களின் பரிந்துரைப்படி முதல் இடம் பெற்ற கவிதை 6 பேரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 8 பேர் என்றவுடன் நானே சற்று யோசித்தேன். எல்லாரும் வேறு வேறு முடிவுகள் கொடுத்தால் என்ன செய்வது என்று. வேதியலையும் கவிதை நயத்தையும் கருத்தில் கொண்டு வேதியியல் பிழையையும் கொண்ட கவிதைகள் நீக்கப்பட்டு 6 பேர் ஒரு கவிதையத் தேர்ந்தெடுத்து உள்ளனர். நானும் ஒரு நடுவராக இருந்து தான் கவிதைகளைத் தேர்வு செய்தேன். அடுத்தும் அறிவியல் தொடர்பான கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்படும். பங்கு பெற்று கவிதைகளைக் கொடுங்கள். அறிவியலைத் தமிழால் வளர்ப்போம்.

வேதியியலும் என்னவளும் - கற்குவேல் பா (karguvelatha) முதல் இடம்
வேதியியலில் ஓர் அரசியல் (L.S.Dhandapani) இரண்டாம் இடம்
வேதியியலும் நிகழ்-வருங்காலமும் - போட்டிக் கவிதை (Dapthi Selvaraj) மூன்றாம் இடம்

67 கவிதைகள் வந்துள்ளன. எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். பல கவிதைகள் வேதியியல் பற்றியதாக இல்லை. 26 வேதியியல் பற்றிய கவிதைகள் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன.வேதியியலை இவ்வளவு அழகாக எழுத முடியுமா என்று வியக்க வைக்கும் அளவுக்கு கவிதைகள் வந்துள்ளன. எங்கள் துறை வேதியியல் ஆய்வாளர்கள் பலரும் கவிதை நயத்தைப் பாராட்டி நடுவராகவும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து உள்ளனர். 7 வேதியியல் ஆய்வாளர்கள் நடுவராக நியமிக்கப்பட்டு உள்ளனர். நல்ல கவிதை ரசிகர்கள் தான் அவர்கள். காதலர்களும் உள்ளனர்.

ஏன் சில நேரங்களில் மட்டும் உதயா. அனுபவம் ஏதேனும் உள்ளதா

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்

இங்கு பெரும்பாலான வேலைகளுக்கு லஞ்சம் கொடுத்தே செல்ல வேண்டி இருக்கிறது. லஞ்சம் இல்லாத இடங்கள் சிலவே. லஞ்சம் இல்லாமல் நமது திறமைக்கு ஏற்ற வேலைகள் வெளிநாடுகளில் கிடைக்கிறது. அங்கு சென்று இவர்கள் கேட்கும் லஞ்சத்தை சம்பாதித்து வந்தால் அதற்குள் தொகை கூடி விடுகிறது. என்ன செய்வது?

சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் உண்டா


Kaleeswaransvks கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே