Kavithaikaran- கருத்துகள்
Kavithaikaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [95]
- கவின் சாரலன் [37]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [16]
- C. SHANTHI [15]
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை... காலம் செய்யும் கோலமடா! தோழா கயவர் தாம் செய்யும் குற்றமடா... கயவர் செய்யும் குற்றமடா...
மறந்தும் குத்திக்காட்டிவிடாதே.. அது தன் அழுக்காறுகளை மறைக்க சேவைச்சீலையைப் போர்த்திக் கொண்டு பொங்கி பொங்கி எழும்... !
நூலகத்தில் எல்லாப்புத்தகமும் இருக்குமாம்!... வாராந்திரிகள் தான் அதிகம் விற்குமாம்! விளம்பரமும் அதற்குத்தான் ஏகமாம்... ஆகையால் நீயும் நானும் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓரமாய் எழுதிக் கொண்டு கிடக்கவேண்டுமாம்... அங்கே என்ன கூவினால் எனக்கென்ன என்று கண்ணைமூடிக் கிடக்க வேண்டுமாம்.
இல்லையென்றால் என்னோடு வா.. வந்து நூலகத்திற்கு ஆட்களைக் கூட்டிவந்து ஆஹா ஓஹோ என்று புத்தகங்களைப் புகழச் செய்... எதற்கும் முடியாவிட்டால் உனக்கென்ன அக்கறை தமிழ் மேல் பொல்லாத அக்கறை.. தமிழை தராசில் வைத்து கண்ணுறங்காமல் காத்துக் கிடக்கும் நானிருக்கும் போது... நான் அல்லவா நக்கீரன்.. எனக்கு நானே முடிசூட்டிக்கொண்ட நக்கீரன்... நீ என்ன புலவன் போய் சுவற்றில் முட்டிக்கொள்.
உன் நியாயத்தை என் வாதத்தில் நீர்த்துப் போகச் செய்யும் திறன் எனக்குண்டு என்பார்.
நீயும் நானும் மௌனகுருவாக வேண்டும்.. போல அவர்களெண்ணம்.
பாரதி அன்றே சொல்லிவிட்டான்...
“வாய்ச் சொல்லில் வீரரடி..”
- நெஞ்சுபொறுக்குதில்லையே இந்நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்... !
என்னம்மோ போங்கள்... ஒன்றும் சொல்வதற்கில்லை...!
உங்கள் சேவையை[?] [!] தொடருங்கள் வாழ்க வளமுடன்.
:-)
அன்பர் அகன் தன் வரிகளில் “நான் முதலில் தளத்தில் நுழையும் பொழுது இருந்த நிலை "உயர "வேண்டும் என்று எண்ணினேன்..செயல் பட்டேன்..வெற்றி பெற்றுக் கொண்டுள்ளேன்..ஒரு ஆதங்கம் மிக்க குமுகாய பற்றாளன் இதைத் தான் செய்ய முற்பட வேண்டும்..நான் நுழைந்த உடன் தளத்தில் நல்ல படைப் பாளிகள் இல்லை என்றும் அவர்களுக்கு முகவரிகள் இல்லை என்றும் பதியவில்லை ..!!”
நல்ல படைப்பாளிகள் இல்லை முகவரிகள் இல்லை என்று அறைகுறையாய் திரித்துவிட்டதின் பேரிலே என் வரிகள் பற்றிய அவருக்கான புரிதலை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது...
நான் எழுதியது சமூகப்பார்வையில் மிகப்பின்னால் ஓடிவரும் என் தோழனுக்காக... முன்ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றேன் என்னும் அகந்தையாளர்க்கல்ல...
தொய்வான ஸ்வரம் மீட்டிக்கிடக்கும் தந்திகளை முறுக்கேற்றி நல்லிசை மீட்டுவதற்கேற்றாற்போல் உருவாக்க உத்வேகம் கொடுக்க விளைகின்றேன்... விண்ணைமுட்டிவிட்டோம் பார் என்னும் வித்தகர்களுக்கல்ல...
தளத்தில் நடந்த பல செயல்தொடர்களை விவரித்து பலர் வெளியுலகுக்கு அடையாளப்பட்டதினை சொன்னமைக்கு நன்றிகள் ஐயா!
“அன்றியும் தளத்தில் 'நுழைந்த ' உடன் .."நல்ல படைப்பாளிகளுக்கு இங்கே முகவரிகள் ஏதுமில்லை...! ஏன்?" என மொழிவதில் "வெற்று விளம்பரம் மட்டும் தானே கிடைக்கும்?” என்றும் கூறியிருக்கின்றீர். எனக்கு அப்படி அனுபவங்கள் ஏதுமில்லை... அதனால் அப்படி இதுவரைக்கும் செய்ததுமில்லை...
மேலும் நீங்கள் கூறியுள்ளதுபோல நானொன்றும் உலகமறிந்த கவிஞனில்லை... உங்கள் அனுபவத்தோடு என் வயதுகூட போட்டியிடமுடியாது... நிச்சயமாய்.. ஆனால் என்ன செய்ய கொட்டைப்பாக்கு வாய்கள் கடித்தாலும் குறுமிளகு உரைக்கத்தான் செய்யும் என்று புரிந்துகொண்டேன்...
என் கவிதையோ படைப்போ அதை பொதுவெளியினில் வைக்கும் போது அதனை விமர்சிக்க,ரசிக்க யாவர்க்கும் உரிமையுண்டே என்னும் என்கொள்கையை எப்போதும் நான் மாற்றியதில்லை... இன்றும் அதையேதான் சொல்ல எண்ணுகின்றேன்.
நான் வனைந்த மண்பாண்டங்களை நீங்கள் செங்கலாக வடிக்க எந்த
அவசியமும் இல்லை... அதை எப்போதும் படைப்பாளிகள் ரசிப்பதில்லை...
அழகிற்கழகு செய்கிறேன் பேர்வழி என்று ஔவையும் முனைந்ததில்லை..
மற்றார் மறுத்துக் கூறாதிருப்பாதனால் தன் செயலெல்லாம் தார்மீகம் என்பது அறிவிழி என்று புரியவைக்கின்றீர்.
புதியவனை புறம்பாய் அழித்து ஏகமாய் புத்திமதி கொடுக்கின்றீர்,
புத்தி முதல் கொள் என்றீர்கள். எனக்கு மிக்கத் தேவை அது, கோபத்தில் வார்த்தைகள் பிறந்தாலும் அவை குறித்தவறா அம்புகளாக்கச் சிரத்தை எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நிச்சயம் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றதல்லவா...!
-நன்றி கவிதைக்காரன்.
வணக்கம்!
நான் எழுதிவிட்ட இந்த பதிவிற்கான [கவிதை என்று ஏற்றுக்கொண்டோர்க்கு கவிதை] காரணத்தை அல்லது அர்த்தத்தினை பலருக்கும் புரியவைக்க கடமைப்பட்டிருக்கின்றேன் போல... ஆனாலும் அதற்கும் முன்பாய் சில விஷயங்களைச் சொல்லிவிட வேண்டியதாக உணர்கின்றேன்.
தாமதத்திற்கு வருத்தங்கள்.
எழுத்து தளம் பற்றி ஏதும் அறியாமல் உள்நுழைந்த வேகத்தில் எல்லோராலும் கவனிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எழுதி இருக்கின்றான் இவன் , அல்லது வேறு எவரோதான் இப்படி புணைப் பெயரில் எழுதுவதாக இங்கே யார் எண்ணிக்கொண்டிருந்தாலும் அந்த எண்ணம் முழுமுற்றிலும் பிழையானது.
நல்லதமிழ் படைப்புகள் கண்டால் தேடி ரசிக்கும் நல்ல ரசிகனாக இருக்க விளைகின்றேன் எப்போதும். இங்கும் பல நல்லபதிவுகள்,கவிதைகள், பதிவர்கள், கவிஞர்கள் இருப்பதும் மலைமேல் விளக்கு.
ஆனாலும் அப்படியான சிலரின் எழுத்துக்களை ரசிக்க முடியாமல் போய்விடும் நிலைக்கு காரணமாய் அபத்தங்களாக எனக்குப்பட்ட சில கவைக்குதவா பதிவுகளைப் பார்த்த போது... தமிழ்கூறும் நல்லுலகில் பிறந்து தமிழை நேசித்து வளர்ந்ததினால் மேலெழுந்த கோபம் தான் இந்த பதிவு. நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை..
இதில் கவைக்குதவா என்று சொல்ல,அல்லது தீர்மானிக்க உனக்கென்ன தகுதி இருக்கின்றது எனக்கேட்டால்? ஐயா! முன்னமே சொன்னது போல நான் முதலில் நல்ல ரசிகனாக இருக்க விளைபவன். அந்தவகையில் என் அனுபவங்களைக் கொண்டே புரிதல் கொள்கின்றேன்..
அடுத்து இந்த பதிவை நான் எழுதியதின் பேரில் பலருக்கும் என்மேல் கோபம் இருக்கலாம்... உங்கள் கோபம் இங்கிருந்து என்னை வெளியேற்றவேண்டுமானால் செய்யலாம், என் பேனாவை பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்காது...
இந்த கருவை முன் எடுத்து வைக்கும் போது நான் இந்த தளத்தின் விதிமுறைகளான 6, 7, 8, 9, ஆகிய எந்த விதிமுறையினையும் மீறியிருக்கவில்லை என்றே கருதுகின்றேன்..
[ 6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.
8. குழந்தைகளுக்கு எதிரான/தவறுதலான கவிதைகளை எழுதுதல் கூடாது.
9. இந்திய சட்டத்திற்கு இந்த தளம் உற்பட்டது. சட்டத்திற்கு எதிராக உள்ளவற்றை அனுமதிக்கப்படமாட்டாது.]
ஆம்! என் எழுத்தில் தனிநபர் தாக்குதலோ விரசமோ,ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்களோ,நயமின்மையோ இல்லை என்பது பொருள்புரிந்து வாசித்த அனைவருக்கும் புலப்பட்டிருக்கலாம்.
அடுத்ததாக 10-வது விதிமுறையான
[10. விளம்பரங்களை மட்டும் நம்பி பதிவுகள் இருக்கக் கூடாது. ]
விதிமுறைக்குள்ளும் நான் முரண்படவில்லை.. இந்த தளத்தில் எவரொருவரையும் தனிப்பட்டமுறையில் எனக்குத் தெரியாது... தெரிந்தவர்களிடத்தும் நான் எழுதுகிறேன் பாருங்களேன், மதிப்பு இடுங்களேன் என்று விளம்பரம் மேற்கொண்டதுமில்லை என் பெயரேகூட பெரும்பாலானவர்க்கு தெரிந்திருக்காது என்றே நினைக்கின்றேன்..
11. பணம் சம்பாதிக்கும் வழிகளை மட்டும் நம்பி பதிவுகள் இருக்க கூடாது.
இந்த வரம்பிற்கு அருகில்கூட நான் எப்போதும் வருவதாக எண்ணமில்லை..
ஆக நான் எழுதிய இந்த பதிவின் முதல் நோக்கம்.
நற்றமிழ் கவிதைகளை அடையாளமில்லாமல்[?] அல்லது காணப்பட இடையூறாய்.. பல சல்லி வேர்கள் மதில் போல் முட்டி நிற்பதைக் கண்டதும்...
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன். என்ற வள்ளலாரின் வரிகள் போலத் தான் என் கோபங்களை எழுதினேன். அதைக் குமுறல்,வருத்தம் என்றெல்லாம் மேம்போக்காய்ச் சொல்லி தப்பித்துக் கொள்ள விரும்புவதுமில்லை. ஆம்! நான் கோபக்காரன்தான். கொஞ்சம் திமிர்பிடித்தவனுங்கூட... என் திமிர் எனக்கு வேலி.
[புதுக்கவிதை பற்றி சுஜாதா (1972)
புதுக்கவிதை தற்போது ஒரு rash போல நம்மிடம் பரவியுள்ளது. "அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் குரங்கைச் சின்னமாய் கொடுத்தால் என்ன" என்கிற வாக்கியத்தை ஐந்தாகப் பிரித்து கவிதையாக பதிப்பித்திருக்கிறார்கள்.
என்னய்யா விளையாடுகிறீர்கள்?
-டைம்ஸ் இன்று தீபாவளி மலர் 2008]
***
அடுத்ததாக தளத்தின் நடைமுறைகளைப்பற்றி எழுதிய முதல் வரியில் ”ஏனிந்த முரண்போக்குக் கொள்கைகளால் உங்கள் முட்டியைத் தரையில் நட்டு வைத்துக்
கிடக்கிறீர்கள்...! ” என்னும்வார்த்தைக்குள்
இருக்கும் இடத்தை குற்றம் சொல்வதாகக் கருத வேண்டியதில்லை...
முட்டிபோட்டு நிற்பவரை எழும்பி நிற்கச் செய்யச் சொல்வதில் யார்க்கென்ன குறை... பின் வரும் மறுமொழிகூறியவர்களிடத்தும் ஆதங்கம் கொள்ளத் தேவையில்லை..
அதுவுமில்லாமல்.. நானும் ஒதுங்கி நின்று என் பாட்டைப்பாடிவிட்டு புறப்பட்டு இருந்திருந்தால் கைதட்டல் வாங்கிக்கொண்டு கிளம்பலாம்...
ஆனால் எழுதுகின்றவரை நன்றாக {!} எழுதவைக்க கொஞ்சம் கோபப்பட்டிருக்கிறேன்.
அது நான்கு பேர் காதில் விழுந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஏன் எனக்கே கூட!
இனி நானும் கூட அஜாக்கிரதையாக எழுதித்தள்ள முடியாதே!
இப்படித்தான் எழுத வேண்டும் ஒரு இலக்கணம் புதுக்கவிதைகளுக்கு கிடையாது. அடி, சீர், தொடை, தளை என்று மரபுக்கு இருப்பதுபோல் புதுக்கவிதைக்கு சில வரையறைகளை திட்டவட்டமாக வரையறுக்க முடியாது.
எங்கள் தமிழ் மொழியின் இலக்கணமே காலத்துக்கு காலம் மாறி அல்லது சில விடயங்களை ஏற்றுக்கொண்டு வந்துள்ளது. அதுபோல்தான் பாட்டியல் நூல்களும். ஆனால் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்று முற்காத்துக்கொள்ளல் அவசியமன்றோ? அதையே இங்கு முன்வைக்கின்றேன்.
இது எழுத்து .காம் என்ற தளத்திற்கு மட்டுமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை... அகிலமெங்கிலும் நிரம்பியிருக்கும் புதுக்கவிதையாளர்கள் அத்தனை பேருக்குமான ஒட்டுமொத்தக் குரல் அவ்வளவே.. இதையேத்தான் அன்று மு.மேத்தாவும் சொன்னார்.
மேலும் ஒருதளம் நிர்வகிப்பதின் சவால்கள் பற்றிய போதுமான அறிவும் எனக்கு கிடையாது. என் சக கவிஞனையும், எனக்கு முன்வரிசையிலும் பின்னாலும் அமர்ந்து ரசிக்கும் வாசகனையும் கூடிவைத்து என் மனதிற் பட்ட கருத்தை மையமாய் எழுதியிருக்கின்றேன்.
எழுத்து தளம் சார்ந்த எவரேனும் இக்கருத்துனால் வருத்தமடைந்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் புரிதல் தெளிவானதாக இருந்திருக்காது என்றே நினைக்கின்றேன். நீங்கள் ”புலமை படைத்த புலவன்” என்று அறிவிப்பதனால் மற்றோர் திறன் மங்கிடப்போவதுமில்லை...
பார்வையாளர் மதிப்பை வைத்து பரிசளிப்பதைப் பற்றிக்கவலையுமில்லை...பரிசுக்குச்சிறப்பா என்பதல்ல என் வினா? தமிழுக்குச் சிறப்பா என்றுதான்...
தேர்வு என்பது பொதுவுடைமையானது... அதில் உங்களின் நிர்வாகத்திறன் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது தலைமைக்குச் சிறப்பு..
இன்னும் பல படைப்பாளிகள் வரவேண்டுமென்பது உங்கள் எண்ணம்.. இன்னும் பல நல்ல படைப்பாளிகள் உருவாக வேண்டுமென்பது என் எண்ணம்.. சின்ன இடைவெளிதான்.
“இன்று ஒருவன் படைத்த கவிதை பலரையும் சென்றடைய காரணம் அந்த முடமையும் ஒன்றுதான்...” ; நீங்கள் குறிப்பிடும் அந்த அவன்களில் நானும் ஒருவனாக இருப்பதால் தானே என் எண்ணங்களை எழுதினதும் அதை ஏற்றும் மறுத்தும் வரும் கருத்துக்களை அறிகின்றீர். ”பலரைச்” சென்றடைய வேண்டியது முக்கியம் என்றால் “எது” சென்றடைகின்றது என்பதில் நான் கருத்துகொள்வதில் என்ன தவறு?
“பார்வையாளர் பலருக்கு ஒரு கவிதை பிடித்தால் அது தவறென்று புலமை கருதுவதேனோ.. ஒருவருக்கு இப்படிப்பட்ட படைப்பு பிடிக்க வேண்டும் என்று அடக்குமுறை வேண்டுமோ”..; நிலவில் முதலில் கால்வைத்தவரைத்தான் தெரியும் மூன்றாமவர், பதினேழாமவரை யாரும் பார்க்க விளைவதில்லை... இங்கு “முதன்மை பிரகடனம்” செய்யப்படுவது பார்வையாளர் கூட்டத்தால் என்றானபின் திறன்கொண்ட படைப்பாளி இங்கே எப்படி முளைவிடுவான்.
இல்லை உங்களுக்குக் கூட்டம்தான் முக்கியமென்றால் நான் இங்கெ இவ்வளவு பேசியதும் வீணென்றே கருதுகின்றேன்.
இருக்கும் இடத்தை பற்றியே குறை கூறுவதும், அந்த குறைக்கு பாராட்டு கூறுவதும் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் என்று நினைகிறீர்கள்; மாற்றங்கள் ஏற்படுத்தாதா என்ன..! என் பேனாவைக் குற்றம் சொல்லி பயனில்லை...
“தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம். தமிழ் மொழி மேல் ஆர்வமுடயவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர் இன்றியமையாத பொக்கிஷம்.”
பொக்கிஷத்தில் பொன்னை வைத்துக்கொடுக்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கு என்றெண்ணுகின்றேன்...
-கவிதைக்காரன்.
புல்மணிடிக்கிடக்கும் தரையைச் சீராக்க வேண்டுமென்றல்லவா நினைக்கின்றேன்...
நிலத்தை விற்றுவிட்டுப்போ என்று என் வேலையைப்பார்த்துப் போவது தான் சம்சாரிக்கு அழகா...!
நஞ்சையும் புஞ்சையும் அறிந்தே விதைக்கிறோம்... களைகளைக் கண்டால் கதிர் அருவாள் எடுக்கிறோம்...! குற்றமென்ன,...
நான் எப்போங்க குமுறி இருக்கிறேன்.. என் எண்ண ஓட்டத்தையே திசைமாற்றிடாதேயுங்களேன்..
அரிதாரம் தான் முக்கியப்படுத்தப்படுகின்றதென்பதை அன்றே யாரோ சொன்னார் ஆம் யாரோ சொன்னார்...! ஹஹ
செம்மண் புழுதிக்காட்டில் சிகப்பு ட்ரவுசர இறுக்கிப் புடிச்சுக்கிட்டு .. நரம்புப்பைய முதுகில் தொங்கக் கொடுத்து ”மதியாண சோத்துக்காக”! மைல்கணக்கில் நடந்து பள்ளிக்கூடம் போற புள்ளைகளோட வாழ்க்கைய கண்முன்னாடி படம்புடிச்சுக்காட்டிப்புட்டீக...!
ஒரே ஒரு மாத்திரைதான். ஆனால் அதை யாருடனும் பகிர்வதாய் இல்லை...!
அம்மாத்திரைக்கு “தனிமை இரவுகள்” என்று பெயர்...!
ஆம்! இருள் எனக்கு இரண்டாம் தாய்.,..! :)
:)
ஹா ஹா ஹா குழந்தைக்கும் ஞானிக்கும் கவலைகள் ஏதுமில்லை என்று படித்ததுதான் நினைவில் வருகிறது.,...
நீங்கள் ஞானி என்றதால் நான் குழந்தைத்தனமாக சிரித்து வைக்கிறேன்.
உங்களின் மீளாக்கத்தினால் என்னை சீர் செய்ய நினைக்கும் எண்ணம் சரியானதா!
எனக்குப் புரியவில்லை.. ஒருபடைப்பாளியின் படைப்பை விமர்சிக்கவும்,விவாதிக்கவும், குற்றஞ்சுட்டவும்,பாராட்டவும் அவன் தனது படைப்பை பொதுவினில் வைக்கும் போது யாவர்க்கும் உரிமையுண்டு... ஆனால்... என் களிமண் பானையை உடைத்து தூளாக்கி உதிர்த்து தண்ணீரில் குழைத்து மீண்டும் நீங்கள் செங்கல் செய்தேன் பார் நேர்த்தியாய் என்பதை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும்...
எந்த படைப்பாளிக்கும் அதை ஜீரணிக்க இயலாது... அல்லது என்னால் இயலாது..!
இன்முகத்தோடே தான் என்கருத்தைச் சொல்கிறேன், தவறெனக் கொள்ளவேண்டாம் என்வாதத்தில் நியாயமுள்ளதாயே நினைக்கிறேன்...
கவிதைக்காரன்.
திறன் அறிந்து சொல்லுதலே அறமும் பொருளுமாகும். எங்கே அறமில்லையோ அங்கே பொருளுக்கும் மதிப்பில்லை..
அழியாதச் செல்வம் நாம் கற்றவை...
அதற்குமுன் எந்த செல்வமும் விளம்பரமும் தக்கதல்ல...
உங்கள் கருத்திற்கு நன்றி...! நான் இங்கே புதியவன்... உங்கள் அனைவரின் படைப்புக்களையும் சுவைக்க கால அவகாசம் தேவைப்படுகின்றது...! தமிழ்பறிமாறுவோம்... :)
-கவிதைக்காரன்.
தமிழ்மேலுள்ள காதலை ஏன் ஆதங்கமாய் அடைகாத்துக்கிடக்கவேண்டும்... அவை அக்கினிக் குஞ்சுகள்...
குஞ்சென்றும் மூப்பென்றும் வித்யாசம் கிடையாது.. வெளிப்படுத்துங்கள்...!
வழியில் கிடக்கும் சில முட்களை அப்புறப்படுத்த குரல்கொடுக்க நினைத்தேன்...
அவரவர் பாதையை அவரவர் புணரமைப்பது நலம் என்றே நினைக்கிறேன்...! நன்றி..
எதிர்க்கருத்தை எழுத்தில்கூட சொல்லலாம்... மறைமுக மதிப்பெண்களால் எனக்கேதும் ஆக்ஞைகளாகப் போவதில்லை..!
-கவிதைக்காரன்.
தங்கள் கருத்துக்கு நன்றி...
ஆனால் உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடு இல்லை... ஆழம் குறைத்து அல்லது நீளம் குறைத்து எழுதுவது என் நலத்தினடிப்படையில் அல்ல... ! என் எழுத்துக்களை விமர்சிக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது... எப்படி எழுதவேண்டும் என கற்பிக்க அல்ல...!
நன்றி!..
எழுத்து .காம் உறுப்பினர்கள் ,கவிஞர்கள்,படைப்பாளிகள்,ரசிகமக்கள். அனைவருக்கும் கவிதைக்காரனின் வணக்கங்கள்.
தோழி ஒருவரின் விடாத அர்ச்சிப்பின் பேரில் எழுத்து.காமில் உள்நுழைந்துள்ளேன்.
மனம் போனபோக்கில் ஏதேதோ எழுதித் திரிபவன் நான், எண்ணங்களின் குழந்தைகள் அழகாக இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை,, ஏனெனில் என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் என்றாலே அழகானவர்கள் தானே...!
ஆயினும் நம் வீட்டுக்குழந்தைகளை அக்கம்பக்கம் பேரோடு பழக்கம் காட்டி நற்பண்புகளை பயில்விப்பது நம் பாரம்பரியம்தானில்லையா..? அஃதே போல் தான் எனது எழுத்துக்கிறுக்கல்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.. பிடித்திருந்தால்... ஆசிகொடுத்துப் போங்கள்... தவறு செய்தால் சுடிக்காட்டிடுங்கள்... சமுதாயத்தில் க்=இன்றைய குழந்தைகள் தானே நாளைய தலைமுறைகள்... ! ஹா ஹா! என்றும் அன்புடன் கவிதைக்காரன்..!
எழுத்துகாமின் புதியவன். !
Thanks to G.D