நல்ல படைப்பாளிகளுக்கு இங்கே முகவரிகள் ஏதுமில்லை...! ஏன்? ..வருத்தம்
நல்ல படைப்பாளிகளுக்கு இங்கே முகவரிகள் ஏதுமில்லை...! ஏன்? எனும் ஒரு படைப்பை தோழர் கவிதைக்காரன் அளித்துள்ளார்...
முதலில் தளத்தில் நிகழ்ந்தவற்றை அசை போட்டு விட்டு பிறகு இந்த படைப்பை அளித்திருக்க வேண்டும்..
நல்ல படைப்பாளிகள் தளத்தில் நன்கு சிறப்பிக்கப் பட்டு வருவது தோழர் முதலில் அறிய வேண்டும்...
"நல்ல படைப்பாளி "எனும் பதம் நீள் பார்வைக்கு உரியது....அளவுகோல் பல உண்டு..அன்றியும் தளத்தின் புள்ளிகள்...கருத்துக்கள்...மட்டும் அல்ல எவர் நல்ல படைப்பாளி என்று எடைப் போட்டிட..!!
நான் முதலில் தளத்தில் நுழையும் பொழுது இருந்த நிலை "உயர "வேண்டும் என்று எண்ணினேன்..செயல் பட்டேன்..வெற்றி பெற்றுக் கொண்டுள்ளேன்..ஒரு ஆதங்கம் மிக்க குமுகாய பற்றாளன் இதைத் தான் செய்ய முற்பட வேண்டும்..நான் நுழைந்த உடன் தளத்தில் நல்ல படைப் பாளிகள் இல்லை என்றும் அவர்களுக்கு முகவரிகள் இல்லை என்றும் பதியவில்லை ..!!அவர்களையும் புதியவர்களையும் இணைத்து பாராட்டி ஊக்குவித்து ஒன்றாய் இணைந்து பலரும் இங்கு செயலாற்றி வருகிறோம்..
தோழர் நிலா சூரியனின் கவிதைப் போட்டி .தோழர் அருண்குமாரின் விமர்சனப் பதிவுகள் , தோழர் காளியப்பனின் ஆசான் பணி,தோழர் கன்னியப்பனின் பழைய சங்கதிகள் பரிமாற்றம்.,தோழர் சங்கரன் அய்யாவின் கருத்து மழை,தோழர் மு.ரா மற்றும் சேது வின் கருத்துக்கள்,தோழர் முத்துநாடன் மற்றும் தோழர் பரிதியின் விமர்சனங்கள் ....அனைத்துக்கும் ஓர் பாலமாக தோழர் அபியின் தோழமை கர நீட்சி என தளத்தின் முன்னோடிகள் பங்களிப்பு உள்ளது..புதியவர்கள் பட்டியலில் மெச்சி உச்சி முகர்ந்து வாழ்த்தப்படவேண்டியவர்கள் பலர் இங்கு முகவரிப் பெற்றுள்ளனர்...
பலரும் முகவரி பெற்றுள்ளனர் பலரும் பெற்று வருகின்றனர்..தளம் மட்டும் அறிந்திருந்த பலர் ஊர் அறிய , உலகு அறிய வெளி வந்துள்ளனர்...ஒரு வேளை உலகறிந்த தோழர் கவிதைக்காரன் தன்னைப் போல் இன்னும் பலரும் இத்தளத்தில் இருந்து அறியப் பட வேண்டும் என ஆதங்கத்தில் செயல் படுவாரானால் நாம் அவருக்கு கரம் நீட்டுவோம்...தோள் அளிப்போம்..!!
அன்றியும் தளத்தில் 'நுழைந்த ' உடன் .."நல்ல படைப்பாளிகளுக்கு இங்கே முகவரிகள் ஏதுமில்லை...! ஏன்?" என மொழிவதில் "வெற்று விளம்பரம் மட்டும் தானே கிடைக்கும்?" சீர் செய்வதில் எவருக்கும் பங்கு உண்டுதானே.?.
.நான் செய்தேன்..செய்வேன்..செய்ததின் பரிசுகள் "பல " பெற்றேன் ...!!..
அன்றில் இருந்து இன்று வரை பல பல பல பல நல்ல படைப்பாளிகள் தளத்தில் உள்ளனர்...அவர்களைப் பற்றி முதலில் அறிய முற்படும் தோழர் எவரும் குமுகாயத் தொண்டு புரிந்ததாக மகிழலாம் எவரும்..!!
ஒரு படைப்பாளியின் படைப்பை பாராட்டலாம்..கருத்துரைக்கலாம்..புள்ளிகள் அளிக்கலாம்..இதை ஏற்கிறது நெஞ்சம்..அன்றியும் கவிதை எனில் அதற்கு என்று சில வடிவமைப்புகள் உள்ளன. அல்லவா..?..புதுக் கவிதை என்றால் எப்படியும் படைக்கலாம் என்றில்லை ..வரியமைப்பும் வசீகரம் கூட்டும்...அழகுக்கு அழகு செய்தால் உணர்ந்து ஏற்க மறுப்பது எனக்கு புரிய வில்லை...
அழகு என்பதற்கு உச்ச புள்ளி அளித்தப் பின் தான் வரிகளின் அழகு அழகுப் படுத்தப்படுகிறது எனில் ஏற்பதில் என்ன தவறு...?
இவ்வாறு இதுவரை பலரும் இத்தளத்தில் செய்துள்ளோம்...மகிழ்ந்தோம்...செய்து வருகிறோம்..மகிழ்கிறோம்..ஏன் எனில் இத்தளம் பலருக்கும் பிறந்த வீடு...சிலருக்குப் புகுந்த வீடு...
இத் தளத்தின் வரலாற்றில் முகமே இதுவரைக் காட்டாத தள நிர்வாகம் வரி வடிவில் "நல்ல "படைப்பாளிகளின் " முகவரி கொண்ட ஒரு தொகுப்புக் குறித்து தனது வாழ்த்துக்களை அளித்துள்ளது..
இன்னும் நான் தோழருக்கு உரைக்க வேண்டும்..அவற்றை அவர் தனது படிக்கற்களாய் அமைத்துக் கொண்டால் இன்புறுவேன்..நான் மிதிபடுவதில் எனக்கு ஏது வலியும்.அவமானமும்.?
திறன் மிக்க தோழர் ஒருவரால் தமிழுக்குப் பெருமை எனில் எனது சிறுமைகள் எனக்கு ஒரு பொருட்டல்லவே..
===============================================
- "எனக்குப் புரியவில்லை.. ஒருபடைப்பாளியின் படைப்பை விமர்சிக்கவும்,விவாதிக்கவும், குற்றஞ்சுட்டவும்,பாராட்டவும் அவன் தனது படைப்பை பொதுவினில் வைக்கும் போது யாவர்க்கும் உரிமையுண்டு... ஆனால்... என் களிமண் பானையை உடைத்து தூளாக்கி உதிர்த்து தண்ணீரில் குழைத்து மீண்டும் நீங்கள் செங்கல் செய்தேன் பார் நேர்த்தியாய் என்பதை எப்படி நான் ஏற்றுக்கொள்ள முடியும்...எந்த படைப்பாளிக்கும் அதை ஜீரணிக்க இயலாது... அல்லது என்னால் இயலாது..! - "
==============================================
தோழர் கவிதைக்காரனின் படைப்பு ஒரு கவிதை என்று எண்ணியே அந்த அழகான கவிதைக்கு அழகு செய்தேன்..அது ஒரு கட்டுரை எனில் செய்தது தவறே..! வருந்துகிறேன்..!!!
அன்றியும் அழகாய் படைப்பு அளித்துள்ளாரே என்று அழகுக்கு அழகு செய்வது இக்காலத்தில் தவறு போலும்...?
புத்திக்கொள்முதல்.- 3 !!!.