Parveen Fathima- கருத்துகள்

நன்றி திரு.முகமது சாப்ரான் அண்ணா...

தன் மகனின் மகன் மீது பொய் சத்தியம் செய்யும் தாய் இருப்பதால் உருவான கவிதை இது...

எளிய வழி ஒன்று உள்ளது
அரசாங்க வேலையில் இருக்கும் அனைவரும் தம் பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் மட்டுமே படிக்க வைக்க வேண்டும் என்கிற முடிவை அரசாங்கம் எடுக்க வேண்டும்...தனியார் பள்ளி நிர்வாகம் எங்கெல்லாம் தன் கிளைகளை வைத்துள்ளதோ அங்கெல்லாம் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற சட்டத்தையும் அரசாங்கம் கொண்டு வர வேண்டும்...வரவுக்கு மேல் செலவு இருந்தால் தவிர தனியார் பள்ளிகளை மூட இயலாது...

சிறந்த பகிர்வு
சிறு பிள்ளைகளோடு பெரியவர்களும் முகத்தை சுளித்து பார்க்கும்படியான காட்சிகள் அதிகமாகி விட்டன..சமூக அக்கரை அனைவருக்கும் தேவை..ஒவ்வொரு நடிகரும் கவர்ச்சியாக தன்னுடன் யாரும் நடிக்க தேவையில்லை என்கிற முடிவை எடுத்தால் நன்மை...ஒவ்வொரு இயக்குனரும் கேமராவின் பின் நின்று பெண்ணின் ஆடைகளை கலைத்து பார்க்க விரும்பாமல் இருப்பதும் சிறந்தது...ஒவ்வொரு நடிகையும் நாளை என்றோ ஒரு நாள் தன் பிள்ளைகள் தங்களின் நடிப்பை கண்டு முகம் சுழிக்க கூடும் என்பதையும் நினைவில் வைப்பதும் சிறப்பு

நாளைய இந்தியா குடிமக்களிடம் இருக்க வேண்டுமா?
நல்ல தலைமுறைகளை நாட்டிற்கு உருவாக்கி கொடுப்பது அல்லவா அரசின் குறிகோளாக இருக்க வேண்டும்...

சம்பளம் வாங்கி கொண்டு தான் செய்து கொடுக்க வேண்டிய வேலைக்கு மீண்டும் லஞ்சமாக பணத்தை எதிர்பார்பது இந்த குணம் இந்தியாவின் ஊளியர்களில் சிலருக்கு பெருமையாக இருக்கிறதோ இல்லையோ இவர்களின் பிள்ளைகளுக்கு என்றுமே தலைகுனிவு தான்...

கழிப்பிடங்களை சுத்தம் செய்வது மிகவும் அவசியமான ஒன்று..பல தொற்று நோய்கள் வர சுத்தமில்லாத கழிப்பிடங்கள் தான் முக்கிய காரணம்...
குத்தகை எடுத்தவர்கள் சுத்தம் செய்ய வேண்டும், அதே நேரத்தில் கழிப்பிடங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு தனி நபரும் தனக்கு பின் மற்றொருவர் இதை பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு பயன்படுத்துவதும் அவசியம்...இரு கைகள் இணைந்தால் மட்டுமே ஓசையை கேட்க இயலும்...எனவே கழிப்பிடங்களை குத்தகை எடுப்பவர்கள் ஒரு கை எனில் அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மறு கை என்பதை மறக்க கூடாது...

அம்மா
என்கிற சொல்லிற்குள் எத்தனை கோடி அன்பு இருக்கிறது என்பதை புரிய வைத்தது.

மீண்டும் உன்னுடன் நான் பேச போவதில்லை...
மீண்டும் உனக்காக நான் உருக போவதில்லை...
மீண்டும் உனக்காக நான் காத்துயிருக்க போவதில்லை...
இனி என் வாழ்க்கையில் நீ என்கிற அத்தியாயமே இல்லை என தெள்ள தெளிவாய் உனக்கு தெரிவித்து திருமணம் செய்து கொண்ட நான்,
ஏனோ உன் நினைவு வந்து உன்னை நவீன காலமான வலைதளம் மூலம் தேடிபிடித்து
உன்னுடன் பேச காத்துயிருந்த நொடி
நான் உணர்ந்தேன் காதலையும் தாண்டி அன்பு வலிமையானது,
ஆம்
நீ என்னையும் என் குடும்பத்தையும் நலம் விசாரித்த பொழுது உணர்ந்தேன் மண்ணில் பல மானிடர்களுக்கு புரிவதேயில்லை
காதலில் காமத்தைவிட தூய்மையான அன்பு அதிகம் என்பது..
ஆயிரம் வலிகள் வந்து பிரிந்து சென்ற பின்பும் அன்பு குறையாமல் பல உள்ளங்களில் நல்ல நினைவுகள் மட்டும் வடுகளாய் நின்றுவிடுகிறது!!!


Parveen Fathima கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே