பிரகாஷ்- கருத்துகள்

தமிழ் மற்றும் மலையாளத்தில் "ஜட்டி" (jatti) என்ற வார்த்தை பயன்படுத்துவதை கேட்டிருக்கிறேன். இந்தியில் "சட்டி" (chaddi) என்று சொல்வார்கள். ஆங்கிலத்தில் உள்ளடைக்கு இந்த வார்த்தை இல்லை. இந்தியாவில் தான் இப்படி சொல்கிறார்கள். "உள்ளாடை" என்ற வார்த்தை பயன்படுதுவதற்க்கு எளிதாக இல்லாத காரணத்தால் பெரும்பாலானோர் பயன்படுத்தமால் போயிருக்கலாம்.

வேப்ப இல்லை மருத்தவ குணம் வாய்ந்தது. அம்மை போன்ற நோய்களுக்கு பழைய வைத்திய முறையில் வேப்ப இல்லை பயன்படுத்துவார்கள். அதன் காற்று படும் விதமாக அதை கட்டி வைத்திருக்கலாம்.

வாழ் என்பதை வாள் என்று படிக்கவும்.

தங்கள் கேள்வி முழுமையாக புரியவில்லை என்றாலும் எனக்கு புரிந்ததற்கு பதில் தருகிறேன்.

கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய்.

மஹா பாரத யுத்தம் தவிர்க்க முடியாத சந்தர்பத்தில் வருகிறது. போர் தடுக்க பல முயற்சிகள் நடந்த போதிலும் அதில் வெற்றி பெற முடியாமல் தர்மம் நிலை நாட்ட போர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அப்போது யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணன் சொல்கிறார். இது ஒரு ராணுவ வீரனுக்கு பொதுவாக வழங்கும் ஒரு அறிவுரை தான். எல்லா சூழ்நிலைகளிலும் இது பொருந்தி வராது. எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் கீதை கூறுகிறது. ஒருவர் தன் கடமையிலிருந்து பின் வாங்குதல் தவறு என்று கூறுகிறார். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இவற்றுக்காக தான் மனிதர்கள் பாவம் செய்கின்றனர். இவைகளை பற்றி கவலைபடாத மனிதன் பாவம் செய்ய வாய்ப்பில்லை.

நீங்கள் கூறுவது உண்மை தான். பைபிள் கொல்வது தவறு என்று கூறுகிறது. Exodus 20:13, “You shall not kill,”. Hebrew வார்த்தை என்ன பொருள் வருகிறது என்றால் வேண்டுமென்றே தீய எண்ணத்தோடு செய்யபடுகின்ற கொலை (Murder ) தவறு என்கிறது. அனால் எல்லா சூழ்நிலையிலும் அவ்வாறு இல்லை. இந்த உலகத்தில் பாவிகளை அழிக்க போர் தேவைபடுகிறது என்று பழைய ஏற்பாடு சொல்கிறது (Samuel 15:18 ).

கர்த்தரும் சிஷ்யர்களும் ஓரிடத்திற்கு போக தயாராகும் பொழுது பாதுக்கப்பிற்க்காக வாழ் எடுகின்றனர். ( Luke 22:36-38) Jesus is preparing His disciples for His departure. He knows that the Jewish leaders are decidedly against Him. In the past, when He sent His disciples out, He took care of all their needs. But now things are going to change.

‘But now, whoever has a money belt is to take it along, likewise also a bag, and whoever has no sword is to sell his coat and buy one. For I tell you that this which is written must be fulfilled in Me, ‘And he was numbered with transgressors;’ for that which refers to Me has its fulfillment.’ They said, ‘Lord, look, here are two swords.’ And He said to them, ‘It is enough.’”

கர்த்தர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இவ்வாறு கூறியிருக்கலாம். நான் யுத்தத்திற்கு ஆதரவானவன் அல்ல. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தேவை தான்.

மார்கம் என்றால் வடமொழியில் வழி என்று பொருள். தரிசனம் என்றால் வடமொழியில் காண்பது. தரிசி என்றால் காண்பிப்பவர். மார்கம் + தரிசி மார்கதரிசி என்றால் வழியை காண்பிப்பவர், குரு, முன்னோடி என்ற வகைகளில் பொருள் கொள்ளலாம். ஆன்மிகம் மற்றும் அரசியிலில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

நீங்கள் கூறிய பாடல் Google தேடுபொறி மூலமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பாடல் வரிகளில் எதாவது மாறி இருக்கிறதா என்று பாருங்கள். உதாரணத்திற்கு சங்கீதா என்பதற்கு பதில் வேறு பெயராக இருக்கலாம்.

ஒருவேளை இந்த பட பாடலை யாரும் இணையதளத்தில் பதிவேற்றாமல் இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். பாடலின் வேறு வரிகள் அல்லது கதாநாயகன் கதாநாயகி பெயர், படம் வெளியான வருடம் வைத்தும் தேடுபொறியில் தேடலாம்.

வடமொழியில் விஷ்வம் என்றால் உலகம் என்று கீர்த்தனம் என்றால் பஜனை (சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை - பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடப்படும் ஓர் இசைப்பாட்டு) என்றும் பொருள். தமிழை போலவே மலையாளத்திலும் இந்த வடமொழி சொற்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

கிரிக்கெட் ஒரு gentleman's game என்று சொல்வார்கள். அது இங்கிலாந்தில் உருவான விளையாட்டு. மேல்தட்டு வெள்ளைக்கார பிரபுக்கள் ஆடி கொண்டிருந்த விளையாட்டு என்பதால் முழுக்கால் சட்டையை பயன்படுத்தி இருக்கலாம். தவிரவும் இன்று உள்ளது போல ஒரு நாள் போட்டி மற்றும் 20 20 போட்டி அன்று இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் தான் இருந்தது. அந்த விளையாட்டில் football போன்று அதிகமாக ஓட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழில் எனக்கு தெரிந்து spell check மென்பொருள் இல்லை.

நல்லது தோழி. உங்களது அறிவியில் ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள் :-)

மற்ற போக்குவரத்து வழிகளை ஒப்பிடும் பொது ரயில் கட்டணம் மிகவும் குறைவு. வசதிகளை மேம்படுத்துவதற்கும் வருட கணக்காக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிப்பதற்கும் கட்டணம் உயர்த்துவதில் தவறில்லை.

சார், ரெண்டு கையும் ரெண்டு காலும் போனா கூட காளீங்கறவன் பொழச்சுக்கவான் சார். கெட்ட பையன் சார் அவன் ! - முள்ளும் மலரும் என்ற படம்

சிறிய படம் அல்லது வேறு படம் போட்டு பாருங்கள்.

PDF - ஐ இணைக்கும் வசதி தற்போது தளத்தில் இல்லை. PDF to Text Conversion செய்து (சாப்ட்வேர் உதவியால்) சமர்ப்பிக்கலாம். ஆனால் பல சமயங்களில் தமிழ் font சரியாக வராது. அதனால் அந்த கட்டுரையை முழுவதுமாக கையால் தட்டச்சு செய்ய வேண்டி வரலாம்.

நல்ல பஞ்ச். பொருத்தமான பதில்.

நீங்கள் பகிரு பொத்தானை அழுத்தியவுடன் அதை உங்களது நண்பர்களால் அவர்களது பக்கங்களில் பார்க்க முடியும். நீங்கள் படித்த படைப்புகளில் உங்களுக்கு பிடித்தவை நண்பர்களும் பார்க்க இது உதவியாக இருக்கும். ஏறக்குறைய facebook இணையதளத்தின் share வசதியை போன்று தான் இதுவும்.

தளத்தில் இபோது வீடியோ பதிவேற்றம் செய்ய முடியாது. அனால் அதை youtube இணையதளத்தில் பதிவேற்றி. அதன் embed code இங்கே கொடுக்கலாம். அதை எப்படி செய்வது என்பதை கீழே கொடுத்துள்ளேன் :

முதலில் நீங்கள் சேர்க்க விரும்பும் youtube இணையதளத்தின் வீடியோ - வின் பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கே வீடியோ - வரிக்கு கீழே share என்று ஒரு இணைப்பு இருக்கும். அதை கிளிக் செய்தால் embed என்ற இணைப்பு தெரியும். அதையும் கிளிக் செய்யவும்.

அதற்க்கு கீழே ஒரு பெட்டியில் (டேச்டரிய) காணொளி சேர்ப்பதற்கான code கொடுத்திருப்பார்கள். அந்த code iframe என்று தொடங்கும். அதை அப்படியே copy செய்து எழுத்து எண்ணம் பகுதியில் பதிவிடவும். இப்போது எண்ணம் பகுதியின் முன் பக்கம் செல்லும் பொது நீங்கள் சேர்த்த காணொளி எழுத்து வாசகர்களுக்கு தெரியும்.


பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே