Subbaraman Nagapatnam Viswanathan- கருத்துகள்

நன்றி, அகன் அவர்களே! தங்களது ஆர்வமூட்டும் பின்னோட்டத்திற்கு.

பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் நட்பு! மிக்க நன்றி திரு ஜின்னா அவர்களே.

அன்பிற்குரிய கவிதா சபாபதி அவர்களுக்கு, நெஞ்சார்ந்த நன்றி.

அன்பு ஜின்னா அவர்களுக்கு,
மிக்க நன்றி.என்மேல் தாங்கள் கொண்டுள்ள அன்பும், மதிப்பும் வெளிப்படுகிறது.
கவிதைப் போட்டி, விதிகள், பரிசில் மிகவும் நேர்த்தியானவையே. நானும் உணர்ந்தேன்; உணர்கிறேன். இருப்பினும், உண்மையை, உள்ளதை உள்ளவாறே உரைக்க வேண்டும் , எழுத வேண்டும் என்ற அவாவினால் சில ஆங்கிலச்
சொற்கள் கலந்துள்ளன.. எந்த மேல்சட்டையிலும் ”தயைசெய்து, என்னைக் காதலி” என்றோ “தயை செய்து முத்தம் கொடு” என்றோ எழுதப்பட்டுள்ளதை நான் பார்த்ததில்லை. நான் பார்த்ததை, உள்ளதை உள்ளவாறு எழுத வேண்டும் என்ற வேட்கையில் இவை சேர்க்கப் பட்டுள்ளன. “ஷேர் ஆடோ” என்பதற்கு வேண்டுமானால், “பகிர்ந்து கொள்ளும் தானியங்கி” என்று எழுதலாம். இருப்பினும்.......................!?!? பரிசில்மீது எனக்கு அவா; உள்ளதை உள்ளவாறு உரைப்பதற்குப் பேரவா. நடுவர்களும் இதை மனத்தில் ஏற்க வேண்டும், ஏற்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். மீண்டும் நன்றி. .


Subbaraman Nagapatnam Viswanathan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே