nandagopal d- கருத்துகள்

காற்று புயலாய் மாறும் (பொங்கல் கவிதை போட்டி)

பட்டு படர்ந்து போன தொக்கி நிற்கும்
மரங்களின் வளர்ச்சியை
போலவேதான் தமிழ் இனமும்...
.
தமிழையும் அதன் எழுத்தையும் தேடி தேடியே
தொலைந்து போக வேண்டுமென்பது
ஆசைதான், திக்கி பேசும் திறனில்லாத
ஆங்கில அவசரம் அழவைத்து விடுகிறது
எம் தமிழை

விழாக்களில் கட்டும் வண்ண வண்ண
காகிதங்ககளாய் ஆகி போகின்றன
மறக்கப்பட்டு தமிழர் திரு நாளும் தமிழும்

ஆயுத போரில் யாவருக்கும் விருப்பம் இல்லை
தமிழை மீட்க சொற் போர் மிக அவசியம்தானோ?

தமிழ் பேசினாலே தலை குனிவென்று
தமிழ் நாட்டிலே பொருளாக்கம்

“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா“ கூறிய கவிஞ்சன்
எம் தமிழ் எங்கே என்ற ஆயிரம் டெசிபல் (ஒலியின் அளவு)
சத்தத்தில் ஒலிக்கிறது அவனின் கல்லறையில்
இருப்பினும்

எங்கும் இருக்கும் காற்று புயலாய்
மாற கூடும் ஏதேனும் தருணத்தில்
அந்த புயல் தமிழாக தான் இருக்கும்
எங்கும் பரவி இருக்கும் தமிழர்களால்...

நன்றிகள் நண்பரே தங்களின் கருத்திற்கு

எதோ நானும் இருக்கேன் என்பது மாதிரித்தான் இருக்கு இந்த நாடகம் .இவர்கள் தமிழ் நாட்டிற்க்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மத்தியஅரசிடமிருந்து தமிழனுக்கு சேர வேண்டியதை வாங்கி கொடுங்கள் தி.மு.க

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

நன்றிகள் நண்பா
இனி வரும் பதிவுகளில் சரி செய்கிறேன் நண்பா

முதலில் என்னை எழுத்து வாசகர்கள் மன்னிக்கவும்.(இன்னும் கூர்மையாக எழுதியிருக்கலாம் தங்கள் பழைய படைப்புகளை ஒப்பிடுகையில்.) உண்மைதான்
ஏன் என்றால் போட்டி விதி முறையின்படி 24 வரிகளில் எழுத வேண்டும் என்ற விதி இருப்பதால்,
படைப்பை திருத்தி திருத்தி கடைசியில் ஒரு குழந்தையின் கிறுக்கலை போல் ஆகி விட்டது


nandagopal d கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே