பொலிகையூர் ரேகா- கருத்துகள்

மன்னிக்கவும் ஏழுயிரீற்றில் ஈ வராது. ஆ வரும்.
அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔ

மன்னிக்கவும் ஐயா, தங்கள் கருத்து தவறானது. தமிழ் இலக்கண விதிப்படி "வந்ததல்லவிச் சொந்தம்" என்பதே சரியானது.இங்கு "வகரம்"தான் உடம்படு மெய்யாக வரும். யகரம் வராது.

"இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்."
உதாரணம்.
மொழி+ அழகு = மொழியழகு

"அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்."
உதாரணம்.
பலா + இலை = பலாவிலை

மன்னிக்கவும், உச்சரிப்பு மென்மையாக இருக்கும் என்றுதான் கூறினேன். மெல்லின எழுத்துக்கள் என்று கூறவில்லை. வந்ததல்ல + இச் என்பதை சேர்த்து எழுதியதால் "வந்ததல்லவிச் சொந்தம் " என்று எழுதினேன். தவறாக இருப்பின் திருத்திக் கொள்கிறேன். கருத்துக்கு நன்றி

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி :)

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

வலிக்கான காரணிகளை மனதில் இருந்து தூக்கி வீச முடியும் பட்சத்தில் வலியை அகற்றி விட முடியும். வலிகள் பாதியில் வந்தவை அவற்றை மாற்றும் சக்தியும் மனதிற்கே உண்டு. அதில் மீண்டவன் வாழ்கிறான், மாண்டவன் சாகிறான்.மீள்வதற்காக வலிகளை இல்லாது செய்யுமாறு அவ்வாறு கூறினேன் ஐயா.

கவி என்பதே பல நேரங்களில் கற்பனையை உள்ளடக்கியதுதான் ஐயா,உட்பொருள் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் கற்பனை கவிதையை அழகாக்கும்.தங்கள் கருத்திற்கு நன்றி.

வந்ததல்லவிச் சொந்தம் என்று படிக்கும் இடத்தில் உச்சரிப்பு மென்மையாய் அமைந்து வரும். வந்ததே இப்பந்தம் என்று கூறுமிடத்து ''ஏகாரம் '' மிகுந்து வந்து நட்பை சிறப்பிக்கும் வகையில் வந்ததே இப்பந்தம் என்று அழுத்தமாக உச்சரிக்கும் வண்ணம் எழுதப்பட்டது.ஏகாரத்தின் ஒலியை படிப்போர்க்கு உணர்த்தவே அவ்வாறு பிரித்து எழுதப்பட்டது.

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. பறவை தன் சிறகை விரித்து வானில் பறப்பது போல மனமும் கற்பனை எனும் சிறகால் எண்ணங்கள் எனும் வானை வட்டமிடுகின்றது.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

மன்னிக்கவும் ஐயா, என் மக்கள் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்தவர்கள்.இன்னும் மரணத்தின் பிடியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இறுதிக் கட்டப் போரில் மரணத்தின் பிடியில் இருந்து தப்பி வந்தார்கள் என்பதுதான் உண்மை. அந்த நிலையில் இருந்து வந்தவர்கள் மரணத்தை வென்றதாய்த்தான் நினைக்கின்றேன்.

வருகைக்கும் வாசித்து வாழ்த்துக் கூறியதற்கும் மிக்க நன்றி :)

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி, சந்தத்திற்காக அவ்வாறு சேர்த்து எழுதப்பட்டது என்பதை பணிவன்புடன் கூறிக் கொள்கிறேன்.

பலர் கடுமையான தாக்குதலுக்கு பின்னர், மரணத்துடன் போராடி அங்கவீனத்துடன் உயிர் பிழைத்து வந்தனர். போர் முடிந்து பல காலம் ஆகியும் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. அதை உணர்த்தவே அவ்வாறு கூறப்பட்டது .

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. இது ஈழம் சார்ந்த கவிதை. இறுதிக் கட்டப் போரில் பிழைத்த பின்னும் இன்னும் பல இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மக்கள் பற்றியது.போரின் பிடியில், மரணத்தில் இருந்து தப்பிய பின்னரும் அவர்களின் வாழ்வில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதை உணர்த்தும் நோக்கில் கூறப்பட்டது .

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி :)

வரவிற்கும் வாசித்து வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி :)

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி :) .
வலிகளைக் கொன்று வலிக்கான காரணிகளை மனதிலிருந்து ஒழிப்பதே இதன் உட்கருத்து . வலிக்கான காரணிகளை மனதில் உயிர்ப்புடனே வைத்திருப்பதாலேயே பிரச்சனைகளில் இருந்து மீள முடிவதில்லை. அவற்றை மனதிலிருந்து நீக்க முயற்சிக்கும்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும். அந்த அர்த்தத்திலேயே வலிகளை ( மனதில் இருந்து ) கொன்று விடு என்று கூறினேன் .

வரவிற்கும் வாசித்து வாழ்த்தியமைக்கும் நன்றி


பொலிகையூர் ரேகா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே