riyaz- கருத்துகள்

நன் மேற்குறிய கருத்தால் கோபித்து கொள்ளாதீர் சகோ! உண்மையில் திருமணம் இரு மனம் இணைவதற்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை எடுத்துரைபதர்காகவும் தான். திருமணதிற்கு வரும் அனைவருக்கும் உணவு அளிப்பது என்பது ஒரு தானம் ஆகும். ஒரு மனிதன் அவன் வாழ்வில் தான தருமங்கள் செய்ய வேண்டும், அப்படி செய்ய இயலாதவர்கள் அவர்களது திருமணதிற்கு வரும் மக்களுக்கு உணவு அளிப்பதால் அவன் அன்னதானம் செய்த புண்ணியம் பெறுகிறான், வயிறு நிறைத்து மக்கள் வாழ்த்தும் பொழுது அது புண்ணியமாக மாறி, மணமக்களை நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழவைக்கும். மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி: "போரில் மாண்ட கர்ணன் அவன் செய்த புண்ணியங்களால் சொர்க்கம் சென்றான். ஆனால் சொர்க்கம் சென்ற அவனுக்கு பயங்கர பசி ஏற்பட்டது. அவன் எதிரில் நிறைய உணவு பண்டங்கள் இருந்து அவனால் ஒரு பருக்கையை கூட உண்ண
முடியவில்லை. மிகுந்த மனக்கவலை அடைந்த கர்ணன், பகவான் கண்ணனிடம் முறையிட்டான். பகவான் கண்ணன் "கர்ணா, நீ அணைத்து தான தருமங்களை செய்தாய் ஆனால் நீ அன்னதானத்தை செய்யவில்லை. அதனால் தான் உனக்கு பசிக்கிறது, கண் எதிரில் உணவு இருந்தும் சாப்பிட முடியவில்லை. ஒரு முறை இரு அந்தணர்கள் உன்னிடம் அன்னசத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்டனர், நீ அதோ அங்கே இருக்கிறது என்று உன் ஆள் காட்டி விரலால் சுட்டி காட்டினாய். அவர்களுக்கு அன்னச்சதிரத்தை சுட்டி காட்டிய உன் ஆள் கட்டி விரலை உன் வாயில் வைத்துக்கொள் என்றார். விரலை வாயில் வைத்ததும் கர்ணனுக்கு பசி தீர்ந்தது". இந்த நிகழ்ச்சியின் மூலம் தானத்தில் சிறந்தது அன்ன தனம் என்று பெரியோர்களால் கூற படுகிறது. (ஒரு வார இதழில் படித்தேன்)

என்ன சகோ இப்படி ஒரு கேள்வி? நமது சந்தோசத்தை இழக்கும் தருணத்தை நாம் கொண்டாட வேண்டாமா? "நல்ல நேரம் முடிய போகுது சீக்கிரம் தாலி கட்டுங்கோ" என்று ஐய்யர் சொல்லுவது காலம், நேரத்தை அல்ல நமது நல்ல நேரத்தை தான்.

ஏன் சகோ? விளையாட நாம் குழந்தைகள் அல்ல! நீவீர் விளையாட வேண்டும் என்றால் கவிதைகளில் விளையாடுங்கள், கதை எழுதுங்கள், நமது இணைய தளத்தில் இருக்கும் அனைத்தையும் படியுங்கள்!!!

நீவீர் எதற்காக சுவாசிக்கின்றீர்

எல்லாம் என் தோழர்களின் புலம்பல்கள் தான் சகோ!!!

குழந்தைகள் சாப்பிடுவதை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சி தானே!!! எந்த கஷ்டங்கள் வந்தாலும் குழந்தையின் சிரிப்பை பார்கையில் எல்லாம் பறந்து போகும்.

அதெல்லாம் அவர்களின் பெற்றோர்கள் கையில் தான் ஏறுகிறது சகோ, ஆடைகளை தேர்வு செய்யும் பொழுதே கண்டித்திருக்க வேண்டும். பெற்றோர்களே பொறுப்பு. அவர்களே கவலை படுவதில்லை, பெண்களை பார்த்தால் சாந்தம் வரவேண்டும் சஞ்சலம் அல்ல. சஞ்சலங்கள் தானாக வருவது இல்லை இது போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு வருவோரை பார்க்கும் பொழுது மட்டுமே வருகிறது, குற்றங்களும் நடக்கிறது.

ஆசை படுவது மனித இயல்பு சகோ, தண்டனைகள் குறைவதால் தவறுகள் அதிகமாகிறது என்பது என் கருத்து, குற்றங்களை தடுப்பதற்கும் செய்த குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதற்கு தானே நீதி மன்றங்கள் அமைக்க பட்டன? பின் ஏன் உயர் நீதி மன்றத்தில் கொடுக்க பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர பட்டு தீர்ப்பு மாற்றி அமைக்க படிக்கிறது சகோ? தீர்ப்பு வழங்க பட்டதை ஏன் மாற்றி அமைக்க வேண்டும்? பின் நீதிமன்றங்கள் எதற்கு?

தற்போது உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே எந்த ஒரு வேலையிலும் சேர முடியும், தமிழை இரண்டாம் பட்சமாக தானே பார்க்கிறார்கள் அனைவரும். உங்களுக்கு இரண்டு புத்தகம் தருகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள் இரண்டுமே ஒரே புத்தகம் ஆனால் தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று, நீங்கள் எந்த புத்தகத்தை தேர்வு செய்வீர்கள் சகோ? தமிழ் புத்தகம் தானே? ஏன் என்றால் நம் தாய் மொழி அதில் படித்தால் மட்டுமே நமக்கு முழுவதுமாக புரியும், அப்படி இருக்க ஏன் நாம் ஆங்கில வழி கல்விதனில் நமது குழந்தைகளை படிக்க வைக்க நினைக்கிறோம்? மதிப்பு உயரும் என்று தானே? anaithu புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க பட வேண்டும், அப்பொழுது தான் நாம் வளர்ச்சி அடைய முடியும் !!

சகோ, கணினியில் 0 மற்றும் 1 மட்டுமே செயல்பாட்டிற்கு உதவுகிறது, இந்தியர்கள் ஆகிய நாம் கண்டு பிடித்தது பூஜ்ஜியம் மட்டுமே, தற்போது அந்த பூஜ்ஜியம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை, 1 க்கு பின் பூஜ்ஜியம் (0) சேர்ந்தால் மட்டுமே அதன் மதிப்பு உயரும்! ஆனாலும் நம்மால் வளர்ச்சி அடைய முடியவில்லையே?

அழகாக இருக்கும் ஒரு ரோஜா பூவினை பறிக்க போனால் கூட முள் குத்ததானே செய்யும்!

உண்மை தானே தோழி!!! அழகாக இருக்கும் அனைத்து உயிரினங்களையும் மனிதன் அடைத்து தானே வளர்கிறான் மனிதர்களை தவிர!!!

நன்றி தோழி!!!

நன்றி தோழி : )

சகோ, தமிழில் பேசுகிறோம், ஆனால் தமிழில் பேசுவதற்கு நாம் பயன்படுத்தும் மொழி என்ன? ஆங்கிலம் தானே? 26 எழுத்துகள் கொண்ட ஆங்கிலத்தை பேசுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், 247 எழுத்துக்கள் கொண்ட தமிழ் மொழி பேசுபவர்கள் தாழ்ந்தவர்களாகவும் தானே இன்றளவும் நமது தமிழ்நாட்டில் கருத படுகிறது? ஆங்கிலேயர்களிடம் நம் விடுதலை பேற்று விட்டோம் என நினைத்தோம் ஆனால் அவர்கள் ஆங்கிலத்தின் கீழ் என்றும் நம்மை அடிமை படுத்திக்கொண்டுள்ளனர். அவர்கள் தயாரித்த பொருட்களை தான் நாம் என்று உபயோகிக்கின்றோம். நாம் எதையும் கண்டு பிடிக்கவும் இல்லை பூஜ்ஜியத்தை தவிர.

சரியாக சொன்னீர்கள் தோழி! பொதுவாக ஒன்றை விட மற்றொன்று சிறந்ததாக தான் தெரியும் அது மனித இயல்பு!!

சகோ! உண்மை தான் இளம் பருவத்தில் காதலின் விளக்கம் நமக்கு தெரியாது! பருவத்தில் பன்றிக்குட்டியும் அழகாக தான் தோன்றும்! 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட காதலிக்கிறேன் என்கின்றான். தற்போது வெளிவரும் திரைப்படங்கள் பள்ளி மாணவ மாணவியர் காதலிப்பது போன்று இருக்கின்றன. திரைபடத்தில் அக்காதல் வெற்றி பெரும். ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆவதும் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து வளர்வதும் திரைபடத்தில் மட்டுமே, ஆனால் நிஜ வாழ்கையில்???

காதல் என்றால் என்ன? உங்கள் கருத்தை கூறுங்கள் முதலில்!!

நன்றி சகோ! என் தோழிக்கு சமர்ப்பணம்


riyaz கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே