சேர்த்தவர் : செ.பா.சிவராசன், 10-Feb-23, 10:07 pm

ஐந்திணை ஐந்நூறு

போட்டி விவரங்கள்

வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும் 500 பாவலர்கள் மூலம் பாடல்கள் இயற்ற திட்டமிட்டுள்ளோம். மரபில் எழுத தெரியாதவர்களுக்கும் இந்த நூலில் வாய்ப்பினை வழங்கும் வண்ணம் மரபில் எழுதுவதற்கு எளிமையான பயிற்சிகளை வாட்சப் குழு மூலமாக வழங்க உள்ளோம். இதுவரை கவிஞராகப் பயணித்து வரும் கவிஞர்களையும் பாவலர்களாக உயர்த்தும் வகையில் பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல இருக்கிறோம். நூல் அச்சிடுவதற்கு முன்னர் ஒரு நூலிற்கான விலையை மட்டும் செலுத்தினால் போதும். வேறு எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்பது உறுதியிலும் உறுதி. கவி நானூறு வாட்சப் குழுவில் இணைபவர்களுக்கு அடுத்தடுத்து முன்னெடுக்கும் அனைத்து திட்டங்களிலும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆகவே இதுவரை கவி நானூறு குழுவில் இணையாத கவிஞர்கள் 10-02-2023 ஆம் தியதிக்குள் 9445473609 என்ற வாட்சப் எண்ணிற்கு தங்களது புகைப்படம்,பெயர்,மாவட்டம்,வாட்சப் எண்ணினை அனுப்பி வைக்குமாறு தமிழன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி

- கவிஞர் செ.பா.சிவராசன்

பரிசு விவரங்கள்

அப்போது தெரிவிக்கப்படும்

ஆரம்ப நாள் : 10-Feb-2023
இறுதி நாள் : 28-Feb-2023  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Mar-2023

ஐந்திணை ஐந்நூறு போட்டி | Competition at Eluthu.com



மேலே