நம் எழுத்து.காம் களத்தில் நிறைய கவிஞர்கள் நாள்தோறும் வந்த...
நம் எழுத்து.காம் களத்தில் நிறைய கவிஞர்கள் நாள்தோறும் வந்த வண்ணம் இருப்பதால்...மரபு கவிதை அறித்தவர்கள்...அதன் நுணுக்கங்களை புதியவர்களுக்கு விளங்கும் வண்ணம் இந்த எண்ணப் பக்கத்தில் எழுதி வந்தால்,அதுவே ஒரு தனி தொகுப்பாய் நின்று, இனி வரும் காலங்களில் கவிதை எழுதுவதை இலகுவாக்கி நல்ல தமிழ் வளர உதவும் என்று நம்புகிறேன்..யாப்பு என்றதும் ஏதோ ஆப்பு என்பது போல் ஒதுங்காமல் ,அதில் இருக்கும் ஓசை நயத்தை,கணிதத்தை,விஞ்ஞானத்தை இந்த காலத்திற்கு தகுந்தால் போல் எடுத்து சொல்வது நம் மொழிக்கு நாம் செய்யும் பெரிய தொண்டாக கொள்ளப்படும்.புதுக்கவிதை என்றாலும் அதற்கும் சில இலக்கணங்களை நாம் வகுக்கலாம்...எத்தனையோ பெரும் கவிஞர்கள் அதை செய்துதான் வைத்துள்ளனர்.உரை நடைக்கும்,உரை வீச்சுக்கும்,மரபு தந்த அழகுக்கும் உள்ள வித்தியாசங்களை புரிந்தால் நல்ல கவிஞர்களையும்,கவிதைகளையும் நிச்சயம் நாம் உருவாக்க முடியும் என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை.