எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தூப்புகாரி நாவல் படித்தேன்.தயவு செய்து உங்களுக்கு நேரம் இருந்தால்,அந்த...

தூப்புகாரி நாவல் படித்தேன்.தயவு செய்து உங்களுக்கு நேரம் இருந்தால்,அந்த புதினத்தை படிங்கள் நண்பர்களே..அருமை. எதற்த்தங்களையும் சமுக அழுக்கையும் படிப்போர் முகத்தில் வாரி அடிக்கிறார் புதினத்தின் ஆசிரியர். படிக்கும் போதே கண்ணீர் இமைகளை கடந்து எட்டிபர்கிறது. படித்து முடிக்கும் போது, நமது தவறுகள் என்னவென்று தெளிவாக சொல்லிவிடுகிறார். மனம் கனத்துதான் போகிறது தூப்புகாரியை படிக்கும் போது... படித்துதான் பாருங்களேன். அது மிக பிரபலமான நாவலும் அல்ல, பிரபலமானவர் எழுதியதும் அல்ல. மலர்வதி என்பவர் அவரின் வாழ்கை அனுபவத்தை மிக சரியாக மிக சிறந்த வார்த்தைகளால் நாவலை செதுக்கியுள்ளார். துப்புரவு தொழில் புனிதம் என்றும், அத்தொழில் செய்வோரும் மனிதர்கள்தான் என்றும் சொல்கிறார். இயல்பான பேச்சினடையில் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறார். சில வார்த்தைகள் நம்மை முகம் சுளிக்க வைத்தாலும் சமுக நடப்பு உண்மைகளை பட்டென்று போட்டு உடைக்கிறார் கூடவே அவர்களின் காதல் நடைமுறையில் எந்த அளவுக்கு கைகூடுகிறது என்பதையும் கலந்து ஒரு நல்ல நாவலை தந்துள்ளார் மலர்வதி. படியுங்கள் தோழரே..

நாள் : 16-Sep-14, 9:32 pm

மேலே