மண்ணிலா உழவுசெய மனிதருக்குள் விருப்பமோ? மண்ண ழிப்பார்! கண்ணிலா...
மண்ணிலா உழவுசெய மனிதருக்குள் விருப்பமோ? மண்ண ழிப்பார்!
கண்ணிலா துருக்காணக் கருதினரோ? கல்வியெனும் கண்ண ழிப்பார்!
பெண்ணிலா உலகெடுத்துப் பெயர்பெறவோ பெண்ணினத்தின் சீர்கெ டுப்பார்!
விண்ணிலா வாழ்வுக்கே விழைந்தோமோ? வேறெங்கே விரைகின் றோமோ?
அரக்கன் நமக்குள் அழிய, அமைதி
வரக்கண் டுலகு மகிழச் - சிறக்கும்
இனியவாழ் வென்றவொளி ஏத்தி வரட்டும்
மனிதரிடைத் தீபவொளி மாண்பு!