எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தேசம். மிக பெரிய பூகோளம் கொண்ட என்...

என் தேசம்.

மிக பெரிய பூகோளம் கொண்ட என் தேசம்
வெயிலில் வெந்து அழிந்ததும் இல்லை
குளிரில் நடுங்கி கிடப்பதும் இல்லை
இயற்கையின் சமநிலை தவறாத என் தேசத்தில்
மனித குளம் சம நிலை தவறியது ஏனோ...
வேங்கையென பாய்ந்த வீரமும் தெளிந்த ஞான செருக்கும்
மதுவிடம் மாய்ன்தொழிந்து போனதே ......
வழி போக்கன் தங்க வீட்டில் திண்ணை வைத்து கட்டிய என் தேசத்தில்
முதியோர் இல்லங்கள் முளைத்தது எதனால்...
வற்றாத நதிகள் பாய்ந்தோடும் தேசம்
ஆயினும் விளை நிலங்கள் ஆயின நாசம் ...
ஊர் கூடி பேசினோம் அன்று ..
சிரிக்க கூட நேரம் இல்லை இன்று ...
அரிசி மாவில் கோலமும் கரைத்து தெளித்த சாணமும்
மறந்ததேனோ மான்விழியே ...
அங்கே செவ்வாய்க்கு அனுப்பி விட்டோம் விண்கலத்தை
இங்கே லங்கையில் காக்க மறந்து விட்டோம் நம் குளத்தை ....

பதிவு : விஜய் பாபு
நாள் : 28-Oct-14, 11:07 pm

மேலே