எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை வணக்கம் .. சிரிப்பதா அழுவதா .. சிந்திக்கிறேன்...

காலை வணக்கம் ..

சிரிப்பதா அழுவதா .. சிந்திக்கிறேன் இப்பொழுது !!

நேற்றிரவு மனைவி என்னை சாப்பிடுவதற்கு அழைத்தபொழுது முகநூலில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், சற்று நேரம் கழிந்து நான் சாப்பிட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவளும் தன் தாயுடன் அமர்ந்து டீ.வீ.யில் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

உண்பதற்கு சென்ற நான் தரையில் ஒருசில இடங்களில் ஏதோ வெள்ளையாகத் தென்பட்டது. யாரோ தயிரைக் கொட்டியிருக்கவேண்டும் என்று எண்ணி அதை துடைத்துக் களைந்தேன். அதை என் மனைவி பார்த்தல் என்னை மெச்சுவாள் என்றெண்ணி மனதில் மகிழ்ந்தேன்.

பிறகு நடந்தது என்ன ? படியுங்கள் மேலும் ...

வெண்டுறை ..

உண்ணும் பொழுது சிதறிய தயிர்த்துளிகள்
என்றெண்ணி நான்ஒரு ஈரத் துணியால்
துடைத்து அதைக்களைந்தேன் மெச்சுவாள் மனைவி
என்றென் உள்ளத்துள்

நானுண்டுகொண்டிருக்கும் பொழுது என் மனைவி அடுப்பறைப் பக்கம் சென்றாள். அப்பொழுது நான் ..

யாரு தயிரை கீழே சிந்தியிருக்கிறார்கள்"

அதைக் கேட்டவுடன், இருகைகளையும் சேர்த்து உரக்கத் தட்டி, "துடைச்சுக் களஞ்சாச்சா" என்று கேட்டாள்.

அதற்கு, ஆமாம் டார்லிங் என்றேன்.

"எனக்கு அப்பவே தெரியும் இந்த மனுஷன் இப்படி ஏதாவது காட்டிவைப்பான்னு"

அதைக் கேட்டு நான் திகைத்துவிட்டேன். அவள், தொடர்ந்து, "

"அங்கெல்லாம் உறும்பு, வறது.(கேரளாவில் பிறந்து, வளர்ந்து படித்தவர்கள் தமிழில் எறும்பு என்பதை உறும்பு என்று சொல்வார்கள். அப்படி சொல்லும் பொழுதெல்லாம் நான் குறும்பு செய்வேன்) உறும்பு வராம இருக்கவேண்டி சாக்பீசால.வரஞ்சு வெச்சிருந்தேன். ஒய் .. மனுஷா என்கிட்டே கேட்டுருக்கலாம் யில்லையா" என்றாள்.

"அடியே .. என் அர்த்தாங்கினி .. எப்படி எனக்குத் தெரியும். அப்படியே நீ செய்வதென்றாலும், டைனிங் டேபிள் கால்களைச் சுற்றி வட்டமோ சதுரமோ போட்டிருந்தால் என் புத்திக்கு எட்டியிருக்கும். இப்படி சிதறிய தயிர்த்துளிகள் போல் இருந்திருக்காது" என்றதை அவள் ஒப்புக்கொள்ள மறுத்தது விட்டாள்.

"முதுகு வலியோட கஷ்டப்பட்டு குனிச்சு போட்டதெல்லாம் போச்சு .. போச்சு என்று சொல்லி, "சாப்பிட்ட கையோட நீங்க தான் லக்ஷ்மன் ரேகாவ .,எடுத்து மறுபடியும் டைனிங் டேபிள் கீழே வரஞ்சு வைக்கணும்" என்று ஆணையிட்டாள்.

ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

நினச்சது ஒன்னு. நடந்தது ஒன்னு. அதனால முழிக்கிறேன் இப்போ நானு ..கணக்கும் தவறாகிப் போனதுனாலே கிடந்து முழிக்கிறேன் அம்மா நானு

அன்பர்களே ! நண்பர்களே !! சிரிக்காதீர்கள். இப்படி நீங்களும் ஏதாவது ஏடாகூடமா செய்து உங்க ஆத்துக்கரிட்ட இருந்து திட்டு வாங்கி இருந்தா வெட்கப் படாமல் சொல்லுங்களேன். நானும் சிரிக்கிறேன்.

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 26-Nov-14, 10:45 am

மேலே