அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா? மழையில்லாத மாநிலமா மலரில்லாத...
அழகில்லாத ஓவியமா ஆசையில்லாத பெண்மனமா?
மழையில்லாத மாநிலமா மலரில்லாத பூங்கொடியா?
மலரில்லாத பூங்கொடியா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா?
பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா?
தலைவனில்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா?
கலையில்லாதநாடகமா காதலில்லாத வாலிபமா?
காதலில்லாத வாலிபமா?
நிலையில்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும்
பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும்
கதையல்லவா?
பருவம் செய்யும் கதையல்லவா?
கவியரசு அவர்கள்
டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீல அவர்கள்
விஸ்வநாதன் ராமமூர்த்தி (இரு ஜாம்பவான்களின் இசை)
ஆனந்த ஜோதி திரைப்படம் 1963 வெளியீடு
தேவிகா - ஓர் அழகிய பெண்ணோவியம் ... என்ன எழில் அந்த புன்னகை....