எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்றும் புதியவள் ! ஒவ்வொரு முறையும் நீ... புதிதாய்த்...

என்றும் புதியவள் !

ஒவ்வொரு முறையும்
நீ...
புதிதாய்த் தோன்றுகிறாய்...
அன்று மலர்ந்த
பூப்போல...!

காலையில் பார்த்தால்
ஓர் அழகு...
மாலையில் பார்த்தால்
ஓர் அழகு...!

உன் மேனி காட்டும்
வண்ணக் கோலம்...
வானம் காட்டும்
வர்ண ஜாலம்!

நீ பார்க்கும் போதெல்லாம்
கண்கள் மலர்கிறது
காதல் பயிர் வளர்கிறது!

நீ புன்னகைக்கும் போதெல்லாம்
இதயம் விழிக்கிறது
என் உயிர் துளிர்க்கிறது!

ஒவ்வொரு முறையும்
நீ...
புதிதாய்த் தோன்றுகிறாய்...
அன்று மலர்ந்த
பூப்போல...!

நாள் : 25-Jan-15, 11:02 am

மேலே