சிவ நிசப்தமியின் எண்ணத்தில்.... பெரும்பாலான சாதனையாளர்களின் வெற்றிக் கோட்டையின்...
சிவ நிசப்தமியின் எண்ணத்தில்....
பெரும்பாலான சாதனையாளர்களின் வெற்றிக் கோட்டையின் அஸ்திவாரம், கேலியும் அவமானங்களாலுமே கட்டப்பட்டிருக்கிறது.
சோதனைக்குள்ளாக்கிடும் துன்பங்கள் அனைத்தும் பிரிந்து செல்கையில் மகிழ்ச்சிக் கதவுகளை திறந்து வைத்துவிட்டுத்தான் செல்கின்றன.
அடுத்து கெடுக்கும் சிந்தனைகளிலேயே தனது நேரத்தை விரயம் செய்பவன் தனது உயர்விற்கான / முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை தேடுதற்கான காலத்தினை தொலைத்து விடுகிறான்.
கேலி, அவமானங்களை புறந்தள்ளி, நம்பிக்கை கொண்டு தனது காரியங்களை கண்ணும் கருத்துமாக எவனொருவன் செயல்படுத்துகிறானோ அவனுக்கு வெற்றி கிட்டுதல் என்பது எளிதாகிவிடுகிறது.
வானத்தின் விடியலுக்காக காத்திருப்பதில்லை பூமி. வானம் இருண்டு கிடந்தாலும் கிடைத்த வெளிச்சத்தில் இயங்கி கொண்டுதானிருக்கிறது பூமி.
- சிவ நிசப்தமி -