எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சீரகத்தின் 10 முக்கிய பயன்கள் !! தமிழர்களின் சமையலில்...

சீரகத்தின் 10 முக்கிய பயன்கள் !!
தமிழர்களின் சமையலில் முக்கியமாக இடம் பெரும் பொருட்களில் ஒன்று சீரகம். இது ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை நாள் அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. மேலும் நீரின் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சீரகத்துடன், சிறிது மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் குணமாகும்.

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வது நல்லது.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்து போட்டு பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.

அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.

வறுத்த சீரகத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு விரைவில் நிற்கும்.

மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

நாள் : 29-Jan-14, 7:13 pm

மேலே