அகலா விலகல் -4 உன் பெயரை உச்சரித்து உதடோரம்...
அகலா விலகல் -4
உன் பெயரை உச்சரித்து
உதடோரம் உலா வந்து
எழுத்தொலிகளாய்
என் செவி நுழைந்து
காற்றிலும் என்னிலும் கரைந்தும் ....
என் காலடித்தடங்களில்
உன் பூப்பாதம் வழி புகுந்து
பரவிய புல்மணமும் ....
என்னையும் உன்னையும்
தம் நிழற் பரப்புக்குள்
நிறுத்திய
நீள் ஒளிக் கம்பங்களின்
பிம்பங்களும் .. .....
என்
ருசித்தலின் வழிசலாய் மாறிய
பனிக்குழைவின் விழுத்துளிகள்
உன் விரல் ரேகை நதிகளில்
குளிர் ஸ்பரிச வலைப்பின்னலாய் .....
திரையரங்க இருக்கைகளின்
இடிபாடு இன்பங்களில்
உரசி உராய்ந்து உமிழ்ந்த
நம் வெப்ப பிழிசல்களின் துளிகள் ....
.தொடுதல்களாய்ப் போன
நமது உணர்வுகள் எல்லாம்
இன்னமும் என்னுள்ளே உயிராய் ......!!!
.......ஆனால்
"தொடாதே என்னை இனி " என சொல்லி
ஒரு மழைப்பொழிவின் அகலமென
விலகிப் போகிறாயே ...,