----ஜீரணம்---- தூக்குபோட்டு செத்துப்போன ஏழுமலையின் ஆத்தா போலிஸ் கொடுத்த...
----ஜீரணம்----
தூக்குபோட்டு செத்துப்போன
ஏழுமலையின் ஆத்தா
போலிஸ் கொடுத்த
அந்த ஓரே போட்டோவ
பாத்து பாத்து கதறும்..
சொல்லிட்டு செத்திருந்தா
நல்லதா எடுத்திருக்கலாம்னு
ஒரு பொம்பளபோலிஸ் கூட
பரிகாசம் பண்ணிச்சி..
ஆத்தாவும் அழுதிச்சி.
அதெல்லாம் அப்ப.
இப்ப மூனுவருஷம் கழிச்சி
என்னமா அழகா
நாக்க துருவிக்கினுகிறான்னு
போட்டோவுக்கு முத்தம் கொடுக்குது.