எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர் ராஜேஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ------------------------------------------------------------------------- காதல்...

தோழர் ராஜேஷ் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
-------------------------------------------------------------------------

காதல் கவிதைகளோ
வாழ்க்கை கவிதைகளோ
கையேட்டு தாள்களில்
சிறைப்பட்டிருக்கும்.
எழுத்தாளர் என்ற என்
சிறகு விரியாமலே
காலத்தின்
கரையான்களுக்கு
இரையாக்கப்பட்டிருக்கும்.

பூகோளப்பந்தில்
எந்தன் ரசனைகள்
இலக்கிய தாகத்தினால்
பிரபலங்களின் கால்களில்
அடிமையாக்கப்பட்டிருக்கும்.

கம்பன் பாரதி
கவி வம்சவிருத்திகள்
என்று கர்வத்தில்
மார்தட்டும்
கவிஞர்கள் எங்களின்
அடையாளங்கள் யாவும்
கடற்கரை ஓர
சுண்டல் பொட்டலத்தின்
மிளகாய் நெடியில்
திணறப்பட்டிருக்கலாம்.

தோழா ! நீ மட்டும்
இந்த தளத்தை
அன்னை தமிழக்கு
அர்பணிக்கவில்லையென்றால்
இந்த உலகவீதியில்
எங்கள் ஆக்கங்கள்
எந்த தாக்கமும் இன்றி
அனாதையாய் அலைந்திருக்கும்

தோழனே ! - எழுத்து
தளம் கொடுத்தாய் -இலக்கிய
களம் கொடுத்தாய்- எங்களுக்கு
கரம் கொடுத்தாய் - உனக்கு
நல்வரம் தமிழ்தாய் தந்திடுவாள்.


இன்று
ஜூலை-9 தேதி
பிறந்தநாள் கொண்டாடும்
எங்கள் அனைவரின் தோழர்
திரு.ராஜேஷ்குமார் அவர்களே..

நீங்கள்
வாழ்வாங்கு வாழ
வையகம் என்றும் வாழ்த்த
வெற்றிகள் என்றும் நிலைக்க
வாழ்த்தட்டும் நமது தமிழ் அன்னை..!!!

வளங்கள் கொழித்து
மகிழ்வுகள் நிறைந்து
வான் புகழ் சேர்ந்து
பொன்னகையாம்
புன்னகை என்றும் நிலைத்து நிற்க
என் உள்ளம் நிறைந்த
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

நீடுழி வாழ்க...!!!



-எழுத்து தள தோழமைகளுடன்
இரா.சந்தோஷ் குமார்.


**2014 ம் ஆண்டு எழுதிய கவிதை . (மீள் பதிவு )

நாள் : 9-Jul-15, 2:55 pm

மேலே