எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம்...

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் முதன்முதலாக வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அந்த படம் மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

அருண் விஜய் கதாநாயகனாக நடித்த போது அவருக்கு கிடைக்காத வரவேற்பு வில்லனாக நடித்த முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரியளவில் கிடைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை இவர் நடிக்க இருப்பது தமிழ் படம் அல்ல. தெலுங்கில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார்.

இதில் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்க, பல்வேறு நடிகர்களை இயக்குனர் தேடிவந்த நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்த ஸ்ரீனு வைட்லா, அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறார். இதனால் அருண் விஜய்யை ராம் சரணுக்கு வில்லனாக நடிக்க தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.

நாள் : 16-Jul-15, 9:50 am

மேலே