எனக்கு தெரிந்தது ஒன்று- வாழ்க்கை .. அதில் புரிந்தது...
எனக்கு தெரிந்தது ஒன்று- வாழ்க்கை ..
அதில்
புரிந்தது இரண்டு- பிறப்பு , இறப்பு ..
அறிந்தது மூன்று - இறந்த, நிகழ், வருங் காலம்..
கிடைத்தது நான்கு - தாய் தந்தை, குரு, நண்பன், நம்பிக்கை..
பயன்படுத்துவது ஐந்து - நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்..
பெற்றது ஆறு - அறிவு உட்பட்ட புலன்கள் ...
நினைப்பது ஏழு - தெரிந்தது , புரிந்தது , அறிந்தது , கிடைத்தது, பயன்படுத்துவது, பெற்றது, இதனுடன் இவை ஆறினையும் உணர்ந்து எழுத வைத்த என் தமிழ் மொழிக் கல்வியின் சிறப்பு ....
- என்றும்...சஞ்சிவ்.