எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சி றுவர்களே கேளுங்கள்...!! து ள்ளியாடும் சிறுவர்களே கொஞ்சம்...

சிறுவர்களே கேளுங்கள்...!!  Image result for சிறுவர்கள்




துள்ளியாடும் சிறுவர்களே 
கொஞ்சம் நில்லுங்கள் 
நல்ல நல்ல அறிவுரைகள் 
பெரியோர் சொல்லக் கேளுங்கள்!!! 

கதிரவன் உதிக்கையிலே 
விழித்துக் கொள்ளுங்கள் 
விழித்த பின்னே பள்ளிப் பாடம் 
மனதில் ஏற்றுங்கள்!!! 

அதிகாலையிலே படித்த பாடம் 
அறிவினில் நிற்கும் - அதுவே 
ஆண்டாண்டு நடக்கும் தேர்வில் 
அதிக மதிப்பெண் கொடுக்கும்!!! 

பிட்சா, பர்கர், சாக்க லேட்டு 
பிணி சேர்க்கும் பண்டங்கள் - உடல் 
நலன் கெடுக்கும் உணவனைத்தும் 
நீங்கள் விலக்குங்கள்!!! 

பொய் புரட்டு வாழ்வில் நரகம் 
தீ யிட்டு பொசுக்குங்கள் 
அன்பு நேர்மை வாழ்வில் கொண்டு 
ஆனந்த மடையுங்கள்!!! 

திருட்டு கொலை இலஞ்சமில்லா 
தேசம் வளருங்கள் 
தீயோரை கண்டு நீங்களுமே 
தேடி அழியுங்கள்!!! 

நாளை தேசம் உங்கள் கையில் 
நினைவில் கொள்ளுங்கள் 
நல்ல பண்பு யாவும் வளர்த்து 
நாடுயரச் செய்யுங்கள்!!! 

சொன்ன அறி வுரைகள் யாவையுமே 
மனதில் நிறுத்துங்கள் 
நேரு மாமா பிறந்த நாளில் இதனை 
உறுதி கொள்ளுங்கள்!!! 

சிறுவர்களே உம்மாலே 
நாளை சிறக்கும் நாடு 
நாடு சிறந்து விளங்கிடவே 
நல் வழியைத் தொடருங்கள்!!!! 

குழந்தைகள் தின வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி  
Image result for சிறுவர்கள்Image result for சிறுவர்கள்Image result for சிறுவர்கள்Image result for சிறுவர்கள் 



பதிவு : C. SHANTHI
நாள் : 14-Nov-15, 5:19 pm

மேலே