எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழைக்கு ஒரு வேண்டுகோள்..!! **தண்ணீரே உனக்கு கண்ணீரில் கடிதமெழுதினேன்...

மழைக்கு ஒரு வேண்டுகோள்..!! 



Image result for rain in chennai
**தண்ணீரே உனக்கு கண்ணீரில் 
கடிதமெழுதினேன் 
சிலநாட்களில் வந்து சேர்ந்தாய் 
மழையாய் மண்ணில்...!! 

உன் வரவினில் 
மகிழ்ச்சி வெள்ளம் 
கரைபுரண்டபோது 
போட்டியாய் நீ ஏன் 
மகிழ்ச்சி கொண்டாய்..?? 

எங்கள் வீட்டுக் குடங்கள் 
தலைகவிழ்ந்து கிடக்கிறது என்று 
வருத்தமுடன் எழுதி இருந்தேன்... 
உன் வரவில் குடங்கள் நிறையவில்லை 
காணாமல் அல்லவா போய்விட்டது..!!

எங்கள் வீட்டுக் குடங்களை மட்டும் 
அடித்துச் செல்லவில்லை நீ 
எங்களின் மகிழ்ச்சியையும் தான்..!! 

நீ வாசல் வரை வந்து நின்றபோது 
உன்னை வணங்கினோம் 
வாழ்த்தினோம்...!! 
எங்களை வீதிக்கு தள்ளிவிட்டு 
எங்கள் இல்லங்களில் உன் வாசம் 
வாழ்த்திய வாய் சபிக்கிறது...!! 

உன் வரவு வாசல்வரை என்றால் 
காகித கப்பலை மிதக்கவிடுகிறோம் 
இல்லையென்றால் 
கப்பலே நாங்கள்தான்..!! 
Image result for rain in chennai

**இங்கே சொடுக்கவும்




பதிவு : C. SHANTHI
நாள் : 2-Dec-15, 4:50 pm

மேலே