எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூன்றாம் பட்டியல் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி...

மூன்றாம் பட்டியல் - கஜல் கவிதைகள் தொடர் பற்றி - 3
=====================================================

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்... 

இன்னொரு இனிப்பான செய்தி இந்த தொடர் பற்றி...

இந்த தொடரில் வரும் அனைத்து கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து 
நீங்கள் எழுதும் கவிதையோடு சேர்த்து மீண்டும் பதிக்கப் படும்...

இரண்டாம் முறை பதியப் போவது ஒரு புதிய பரிமாணத்துடன் இருக்கும்.'
அதாவது தமிழில் எழுதியதை எழுதியவர் பேருடனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவரின் பெயரை
அதனுடன் சேர்த்தும்(மொழிபெர்ப்பு செய்த கவிதையையும்) வேறு ஒரு புதிய கஜல் தொடர் என்ற பெயரில் ஒரு ID  
யை உருவாக்கி தொடர்ச்சியாக அதில் பதக்கப் படும்...

எழுதும் தோழர் தோழமைகள் அனைவரும் அவர்கள் பெயரிலேயே எழுதி அவர்கள் ID யில் இருந்தே எழுதுங்கள்...
பிறகு மொழிபெயர்ப்பு செய்த பின் அதை கஜல் தொடர் என்ற ID யில் வரிசையாக பதிவிடப் படும்..

அதனால் இந்த தொடரை தொடர்ச்சியாக வாசிக்க அனைவருக்கும் ஏதுவாக இருக்கும்...

இந்த ஒப்பற்ற மொழிபெயர்ப்பு வேலைகளை கருணா சார் செய்வார். அவர் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்வதால்
ஒரே பாதையில் ஒரு தெளிந்த நீரோடையாக அது காட்சி தர போகிறது...

இதை ஏற்றுக் கொண்ட கருணா சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் என் சார்பாகவும்
உங்களின் சார்பாகவும் சமர்ப்பிக்கிறேன்...

இந்த தொடர் வேறு ஒரு திசை நோக்கி பயணப் பட போகிறது...
அந்த திசை எதுவென்று இப்போது சொல்ல மாட்டேன்... 
காலம் கனிந்து வரும்போது உங்களோடு அதை பகிந்து கொள்கிறேன்...
அதுவரை அது சஸ்பென்சாக இருக்கட்டும்...

இப்படி இந்த தொடரை வேறு திசை நோக்கி பயணம் மேற்கொள்ள போவதால்
எழுதும் தோழர் தோழமைகள் தயவு செய்து தங்களது ஆகச் சிறந்த படைப்பை தர முன் வர வேண்டும்..
எப்போதும் எழுதுவதை போல மானே தேனே பொன்மானே அன்பே ஆருயிரே கண்ணே மணியே என்றெல்லாம்
வந்து விட கூடாது... 

அதையும் தாண்டிய ஒரு அழகிய படைப்பாக இது இருக்க வேண்டும்...

முக்கியமாக எழுதும் தோழர் தோழமைகள் கீழே தரப் பட்டுள்ள தங்கள் வரிசைப் படிதான் எழுத வேண்டும்...
அதுவும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் எழுத வேண்டும்..

மேலும் ஒரே நாளில் இரு பதிப்புகளோ அல்லது ஒரு நாள் இடைவெளியோ இதில் இருக்க கூடாது...
எழுத போகும் அனைவரும் தங்களின் நாள் எது என சரியாக கணக்கு வைத்துக் கொண்டு அதற்கேற்றார் போல
பதிக்க வேண்டுகிறேன்..

முதல் பட்டியல் பெயர்கள் கீழே...

1. ஜின்னா
2. சரவணா (கட்டாரி)
3. கவிஜி 
4. கலா ரசிகன் கண்ணன்
5. ஆண்டன் பெனி
6. ராஜன்
7. கருணா
8. கனா காண்பவன்
9. சுஜை ரகு
10. குமரேசன் கிருஷ்ணன்
11. மனோ ரெட்
12. தர்மன்
13. பழனி குமார்
14. சியாமளா ராஜ சேகரன்
15. கவிதா சபாபதி
16. ராஜ் குமார்

இப்போது இரண்டாம் பட்டியல்....

17. மகிழினி
18. கார்த்திகா AK 
19. ஜெயராஜ ரத்தினம்
20. கவிப்புயல் இனியவன் 
21. KR ராஜேந்திரன்
22. முகமத் சர்பான் 

இப்போது மூன்றாம் பட்டியல்..

23. உதயா சன்
24. ஆதிநாடா
25. அமுதா அமுதா
26. அனு ஆனந்தி
27. சோ. சாந்தி

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

இந்த பெயர் பட்டியல் இன்னும் நீளும்...

தொடரை வெற்றி பெற செய்வோம்..
வளர்வோம் வளர்ப்போம்..

வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 

நட்புடன்
ஜின்னா.

பதிவு : ஜின்னா
நாள் : 12-Dec-15, 12:56 pm

மேலே