எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொன்மேனி பருவம் போல புது நெல்லு அசைந்தாட கருநாக...

பொன்மேனி பருவம் போல

புது நெல்லு அசைந்தாட
கருநாக பாம்பெனவும்
சசெங்கரும்பும் விளையாட
ஒய்யாற நடையினிலே
தை மகளும் நடமாட
தேன் சுவையாம் தமிழ் மொழியும்
பாரெங்கும் கீதம் இசைக்க
வண்ண வண்ண மலர்களை போல் கன்னியர்கள்  
மோனமதில் ஆழ்ந்திருக்க
கட்டிளம் காளைகளும்
ஜல்லிகட்டில் வீரமிட
தமிழர் திருநாளாம்
தை திங்கள் நாளினிலே
ஊரெல்லாம் விழாக்கோலம்
இல்லமெல்லாம்
பொங்கலை போல் பொங்குதன்றோ
தமிழ் மணம் உள்ளமெல்லாம்

நாள் : 12-Jan-16, 9:54 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே