எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்டுக்கோட்டையார் - பாமரர்களின் பாட்டு வாத்தியார் பாமரர்களையும் தன்...

பட்டுக்கோட்டையார் -  பாமரர்களின் பாட்டு வாத்தியார்



பாமரர்களையும் தன் பாட்டில் கட்டிப்போட்ட பட்டுக்கோட்டையாரின் பிறந்த தினம் இன்று.

( பூத்தது ஏப்ரல் 13  1930 - உதிர்ந்தது  அக்டோபர் 8,  1959)

சிறுவயதிலேயே இறந்து போனாலும்  சிறந்த தமிழ் அறிஞர், உலகத்தை வார்த்தைகளால் திரும்பிப் பார்க்கவைத்த சிந்தனையாளர், பாமரர்களை தன் பாடல்களால் கட்டிப்போட்ட பாடலாசிரியர்  எளிமையான தமிழில்
சமூக சீர்திருத்தக் கருத்துகளை தன் பாடல்களால் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  ஒலிக்கச் செய்தவர்.


29 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் தன் பாடல்களால் காலாகாலத்துக்கும் எங்களைப் போன்ற அடித்தட்டு விவசாய மக்களிடம் இவர் பாடல்கள் மிகப் பிரபலம்.

காதல் பாடல்கள் மட்டுமே அதிகம் வந்த அந்தக் காலங்களில் சமூக சிந்தனையுள்ள பொதுவுடைமை கருத்துகளை தன் பாட்டில் கொண்டு வந்த சிறப்பு இவரை மட்டுமே சேரும்.

அவரை நினைக்கும் ஒரு நாளாக இந்த நாள் எல்லோர் மனதிலும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு கவித்தோழர்களும் அவர் அளவுக்கு அடித்தட்டு மக்களிடமும் புகழ்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணம்.


நாள் : 13-Apr-16, 10:03 pm

மேலே