எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேதைகள் பாதம் பதிக்க  உருவானபாதையை தான்
முட்டாள்கள் முட்களால் மூடினார்கள்,
சாதி,மதன, இன பேதமற்ற  கருத்து எப்போதும்
கொண்டாடப்படுவதில்லை...

மேலும்

வயதஞ்சிலேயே

பஞ்சாய் பறந்தேன்
பதினைஞ்சிலே
பம்பரமாய் சுழன்றேன்
கஞ்சியோ கூழோ
கெஞ்சியும் கொடுக்கா
வஞ்சகரின் நெஞ்சை
வாஞ்சையுடனா
கொஞ்சவும் முடியும்
நஞ்சையும் புஞ்சையும் நிறைந்த
அஞ்சுக உலகிலகில்
பஞ்சமும் பாவமும்
பல்வேறு முகத்தோடு 
ஆள்வது ஏனோ  பரமானந்த மே 

மேலும்

பட்டுக்கோட்டையார் -  பாமரர்களின் பாட்டு வாத்தியார்



பாமரர்களையும் தன் பாட்டில் கட்டிப்போட்ட பட்டுக்கோட்டையாரின் பிறந்த தினம் இன்று.

( பூத்தது ஏப்ரல் 13  1930 - உதிர்ந்தது  அக்டோபர் 8,  1959)

சிறுவயதிலேயே இறந்து போனாலும்  சிறந்த தமிழ் அறிஞர், உலகத்தை வார்த்தைகளால் திரும்பிப் பார்க்கவைத்த சிந்தனையாளர், பாமரர்களை தன் பாடல்களால் கட்டிப்போட்ட பாடலாசிரியர்  எளிமையான தமிழில்
சமூக சீர்திருத்தக் கருத்துகளை தன் பாடல்களால் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  ஒலிக்கச் செய்தவர்.


29 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் தன் பாடல்களால் காலாகாலத்துக்கும் எங்களைப் போன்ற அடித்தட்டு விவசாய மக்களிடம் இவர் பாடல்கள் மிகப் பிரபலம்.

காதல் பாடல்கள் மட்டுமே அதிகம் வந்த அந்தக் காலங்களில் சமூக சிந்தனையுள்ள பொதுவுடைமை கருத்துகளை தன் பாட்டில் கொண்டு வந்த சிறப்பு இவரை மட்டுமே சேரும்.

அவரை நினைக்கும் ஒரு நாளாக இந்த நாள் எல்லோர் மனதிலும் இருக்கவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு கவித்தோழர்களும் அவர் அளவுக்கு அடித்தட்டு மக்களிடமும் புகழ்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த எண்ணம்.


மேலும்

நன்றி அய்யா. அவர் வாழ்ந்தது குறைவான காலம் என்றாலும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை பாடலில் கொண்டுவந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய ஏழைப் பங்காளன் இவரென்றால் அது மிகையில்லை. தமிழிருக்கும்வரை இவர் இருப்பார்.. 14-Apr-2016 4:28 pm
இனிய எண்ணம் . அழகிய நினைவு கூறல் சித்திரையில் சித்திரம் தீட்டிட வந்திட்ட பத்தரைமாத் துப்பட் டவன் ---அன்புடன்,கவின் சாரலன் 14-Apr-2016 8:00 am

மேலே