எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம் பச்சை மரத்தடி அமர்ந்து இச்சை...

கற்பனைக்கும் உண்டோ கடிவாளம்

பச்சை மரத்தடி அமர்ந்து
இச்சை தீர
இலக்கியம் படைக்க ஆசை

நீல வானம் துரத்தி
உலகமெங்கும் உலா போகும் ஆசை

அலையோடு ஆடும்
கலை மீனாகி
கடலின் கலை காண ஆசை

கருமேகத்தை கைப்பற்றி பாலைவனத்
தெருவெங்கும் மழைநீர்
தெரிக்க ஆசை

மலைக்காடும் மயிலாகி
மலைக்கும் நடனமாட ஆசை

கூவும் குயிலாகி
கூச்சலிட ஆசை

அற்ப வாழ்வில்
இத்தனை ஆசை

கற்பனைக்கு போடும் கடிவாளம்
விற்பனியில் இல்லை பின்
கற்பனையால் வரும் ஆசைக்கேது கடிவாளம்

பதிவு : Arunkumar Krishnasamy
நாள் : 20-Mar-14, 3:28 pm

மேலே