ஆடி வெள்ளி…!! ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு பொங்கல்...
ஆடி வெள்ளி…!!
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு பொங்கல் வைப்பது கூழ்வார்ப்பது அருள்வாக்கு கேட்பது என்றெல்லாம் ஓரே திருவிழாக் கொண்டாட்டம் தான். மக்களின் முகங்களில் மகிழ்ச்சி சந்தோஷம் காண முடிக்கின்றது. ஆனால், கூழ்வார்ப்பு என்ற பெயரில் அண்டா அண்டாவாய் நிரம்பும் கூழினை யார் குடிக்கிறார்கள்? யாரும் குடித்து நானும் பார்த்ததில்லை. அக்கூழினைப் பள்ளம் தோண்டி அதில் ஊற்றி மூடிவிட்டு வீணாக்குகிறார்கள் அல்லது பிராணிகள் வளர்ப்போர் வந்து குடங்களில் வாங்கிக் கொண்டுப் போய் அவைகளுக்கு ஊற்றி பசியாற்றுகிறார்கள். அதற்கு பதிலாக மக்கள் விரும்பி சாப்பிடும் விதவிதமான ஏதேனுமொரு பொருளைப் படைத்து அம்மனுக்கு காணிக்கையாக்கலாம். அப்பொருளையே வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்து, மகிழ்ச்சியோடு புண்ணியம் தேடலாமே. பக்தியிலும் மாற்று சிந்தனைகள் கொண்டு வந்து திருவிழாக்களைப் பெருமையோடு கொண்டாடி மகிழலாமே. எல்லாவற்றிற்கும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ந.க.துறைவன். * "overfa&� P