நீரிறைத்தாலும் பாலை சோலையாகாது ! நிமிர்த்தினாலும் நாய்வால் நிலைமாறாது...
நீரிறைத்தாலும்
பாலை சோலையாகாது !
நிமிர்த்தினாலும்
நாய்வால் நிலைமாறாது !
இமைமூடினாலும்
வழியும்கண்ணீர் நிற்காது !
இதயம்நின்றால்
பிரிந்தவுயிர் திரும்பாது !
வற்றியகுளத்தில்
மீன்பிடிக்க இயலாது !
உடைந்திட்ட நட்பும்
ஒன்று சேராது !
தூற்றிய உள்ளங்களுக்கு
போற்றிடத் தோன்றாது !
பழனி குமார்