எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளின் குழந்தையை பார்த்தேன்! முகநூலை சொடுக்குகையில் சற்றும் எதிர்பாராமல்...

 என்னவளின் குழந்தையை பார்த்தேன்!

முகநூலை சொடுக்குகையில் சற்றும் எதிர்பாராமல் ஒரு குழந்தை முகம். ஆனால், எங்கோ கண்ட முகம். தேடிப்பார்த்ததில் அது என்னவளின் அதே முகம்.   

சாயமும், சாயலும் அப்படியே அவள் தான்!  

எனக்குள் இழப்பும், இன்பமும் ஒருமித்த உணர்வு!!   
இழப்பு அவள் என் வாழ்க்கையில் வராதது!  
இன்பம் அவளை குமரியாய் கண்ட கண்கள் குழந்தையாய் கண்டது!!   

உடன் வாழ்வது ஒரு இன்பமெனில், உள்ளத்தால் வாழ்வது மற்றொரு இன்பம்!  
 
நீ காதலித்தவளுடன் வாழ முடியாவிடில், கவலை வேண்டாம் அவள் சந்தோசம் உணர்ந்து வாழ்வது மற்றொரு காதலின் அடுத்த நிலை!   

காதலை மறுத்த காதலியை கொல்வது கொடூரம்! 
அவர்கள் கொல்வது காதலியை மட்டும் அல்ல.. காதலையும் தான்!!     

கிறுக்கல்கள்:

அப்துல் பாஸித்.ச 
துபாய் 
 

பதிவு : Abdul Baseed Sarbudeen
நாள் : 4-Sep-16, 4:12 pm

மேலே