#ஜல்லிக்கட்டு காங்கேயம் காளை வருது பாருடா கங்கணம் அவுக்க...
#ஜல்லிக்கட்டு
காங்கேயம் காளை வருது பாருடா
கங்கணம் அவுக்க ஆம்பள யாருடா?
கம்பு தின்னு கொம்பு சீவியது
தெம்பு இருக்கா வம்பு பேசிட! செம்பட்டி சிவன் காளை சீறுது
மண்வெட்டி போல பார்வை மோதுது!
கும்மட்டி அடுப்பா நெனப்பு புகையுது
பாம்பாட்டி வித்தை இங்கே பலிக்காது! முட்டவரும் போது எட்டி நில்லு
கிட்டவரும் போது கட்டி வெல்லு!
எட்டி நின்னா வீரம் இல்லை
கட்டி அணைக்கும் நேரம் தான்டா! கை கோர்த்து கால் பார்த்து
மெய் தழுவு தமிழனின் தோளடா!
பொய் பேச்சை புறம் தள்ளு
மையாலே உன் பேர் சொல்லடா! துள்ளியாடி வெற்றிக்கு புள்ளி வை
புள்ளியாகும் புறப்படு களம் தேடி!
வள்ளி வந்து நிப்பா வாக்கப்பட
சொல்லிவை தை பிறக்கும் தேதி!!