எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#வயல்வரப்பு. கன்டாங்கி கன்டாங்கி சேலையிலே எனை துண்டாக்கி துண்டாக்கி...

#வயல்வரப்பு.

கன்டாங்கி கன்டாங்கி சேலையிலே
எனை துண்டாக்கி துண்டாக்கி போறவளே! முன் சொருகிய முந்தானையில
என்னை முழுசாக இழுப்பவளே! பின் கொசுவ மடிப்பினிலே எனை
பின்னிக்கிட்டு நடப்பவளே! ஒத்தை வரப்புல தான் நீயும்
ஓடி வருகையிலே!
மொத்த வயலும் குத்தகையில
சுத்தவிட்டு ஆடுமடி! சுத்துபத்து ஊருக்குள்ள அடி
சுந்தரியே உன்னைப்போல
வந்து நிக்க யாருமில்ல
மாமன் மனசுக்குள்ள! நீ சுமக்கும் கஞ்சிக்கலயம்
நீர் விட்ட மோர்போல
நித்தமும் இனிக்குமடி
சித்தமும் குளிருமடி! வரப்போரம் ஒரு குடிசை
வாடிப்புள்ள வாழ்க்கைகுள்ள
வாழ ஒரு சீர்வரிசை
வேணாமடி ஓர் வரிசை!!

கவிமுத்து.

பதிவு : கவி முத்து
நாள் : 22-Oct-16, 12:06 pm

மேலே