அப்பா, என் முதல் பாதுகாப்பு தாயின் கருவறை பின்பு...
அப்பா,
என் முதல் பாதுகாப்பு தாயின் கருவறை
பின்பு தந்தையின் அரவணைப்பு...
நன் நடை பலகையில் பிடித்த பிடி
நன் தளர்ந்தாலும் தளரவில்லை..
தெரிந்தே செய்த தவறுக்கும்
என்னை தவறு சொல்லாதவர்....
தங்க இயலாமல் நான் கண்ணீர் சிந்துகையில்
அதை ஆனந்த கண்ணீரை மாற்றுபவர் .......
துவளாமல் நான் இருக்க தோள் கொடுப்பவர்
தூங்காமல் நான் படிக்க துணை இருப்பவர் .....
கதை போல் நீளும் உங்களை பற்றி சொன்னால்,
அனால் இது கவிதை அல்லவா,
வேர்வை சிந்த
உடல் தேய
நிறம் மங்க உழைத்த உங்களை
உதிரம் கொடுத்தேனும் உயர வைப்பேன் உலகில் !