புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தை விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது...
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வார்த்தை விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது . பல சொல்கள் நாம் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று இந்த விளையாட்டு விளையாடிய பிறகே எனக்கு தெரிகிறது .
ழ, ல,ள வித்தியாசம் ஒரு சொல்லின் அர்த்ததை எப்படி மாற்றி விடுகிறது . அதில் நமக்கு இருக்கும் அறிவை சோதிப்பது என்பது இந்த வார்த்தை விளையாட்டின் சிறப்பம்சம்.
ஆங்கில வார்த்தைகளும் அப்படித்தான். மூன்றாவது நான்காவது நிலையிலேயே நம் ஆங்கில , தமிழ் அறிவுக்கு சவால் காத்திருக்கிறது.
குறுகிய காலத்திற்குள் யார் சரியான விடையை 10 க்கு 10 பெறுகிறார்கள் என்பதே இதன் சவால். நான் 3 முறை முயற்சித்து தோற்றுவிட்டேன். ஹீ ஹீ ஹீ
நேரத்தின் அடிப்படையில் வெகு சீக்கிரமாக நமது சிந்திக்கும் திறனை சோதிக்கும் உளவியல் ரீதியான அற்புத விளையாட்டே இந்த வார்த்தை விளையாட்டு..!
இதனை உருவாக்கிய எழுத்து தளத்தின் மென்பொருள் கட்டமைப்பு மற்றும் விரிவுரையாளர்கள் குழுவுக்கு என் சிறப்பு பாராட்டுக்கள். பலத்த கைத்தட்டல்கள்..!