இதற்கெல்லாம் வெட்கப்படலாமா? --------- -------------- ----------------- --------------- தாய்ப்பாலின்...
இதற்கெல்லாம் வெட்கப்படலாமா?
--------- -------------- ----------------- ---------------
தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி, பலரும், மாய்ந்து மாய்ந்து கூறினாலும், மாடர்ன் கலாசாரத்தை பின்பற்றும், தற்போதைய பெண்கள், அதை பொருட்படுத்துவது இல்லை.
ஆனால், ஆஸ்திரேலிய நாட்டு பார்லிமென்டில் உறுப்பினராக உள்ள, லாரிசா வாட்டர்ஸ் என்ற பெண், இந்த விஷயத்தில், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
பிறந்து, இரண்டு மாதமே ஆன, தன் பெண் குழந்தையுடன், சமீபத்தில் பார்லிமென்டிற்கு வந்திருந்த லாரிசா, இருக்கையில் அமர்ந்தபடி, குழந்தைக்கு, தாய்ப்பால் கொடுத்தார்.
அந்நேரம் பார்த்து, தீர்மானம் தாக்கல் செய்வதற்காக, லாரிசாவை அழைத்தார், சபாநாயகர். சிறிதும் தயங்காமல், குழந்தைக்கு பால் கொடுத்தபடியே, இருக்கையிலிருந்து எழுந்து நின்று, தீர்மானத்தை தாக்கல் செய்ததுடன், அதுகுறித்து, சில நிமிடங்கள் பேசவும் செய்தார், லாரிசா.
பின், மீண்டும் இருக்கையில் அமர்ந்து, தாய்ப்பால் கொடுப்பதை தொடர்ந்தார். அவரது இந்த செயலுக்கு, பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர் கூறுகையில், 'யாரோ சிலர், என்னைப் பார்த்து கிண்டலடிப்பர் என்பதற்காக, என் குழந்தைக்கு பால் கொடுப்பதை என்னால் நிறுத்த முடியாது...' என்கிறார்.
— ஜோல்னாபையன்