எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் பள்ளி ------------- தேசிய மேல்நிலைப் பள்ளி ,...

என் பள்ளி
-------------
தேசிய மேல்நிலைப் பள்ளி , திண்டிவனம் ...
பேச்சு நடையில்  நேஷனல் ஸ்கூல் ...(திண்டிவனம் நேஷனல் ஸ்கூல்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------


வானம் இங்கே வசந்தமாகி ...
நானும்  இங்கே வானம்பாடி...

உன்னோடு ஓடிப்பிடித்து விளையாடிய நாட்கள் ...
வராண்டாவில் கத்திக்கொண்டு ஓடிய நாட்கள் ...
காட்டு வேப்பிலையை பறித்து கீழே போட்ட நாட்கள் ...
தோழியும் நானும் திரிந்த எங்கள் பள்ளி வளாகம் ...
மணி அடித்ததும் இரண்டாவது மாடியில் இருந்து
அடித்து பிடித்து முந்தியடித்து
சின்ன வழியில் நூற்றுக்கணக்கானோர் இறங்கிய நாட்கள் ...

மறக்க முடியுமா .....!!!
மறக்க முடியுமா .....!!!
ஏ மறக்க முடியுமா .....

கரும்பலகையில்
மிக மிக மிக அடங்கவில்லை என்று எழுத வைத்ததும் ...
வாலு தனம் செய்து வெளியில் நின்றதும் ...
அழுத என் தோழியை அரவணைத்ததும் ...
தோழியின் வெற்றியில் தூக்கி சுற்றியதும் ,....
தேர்வு தாளை எழுதும் பொழுது தோழிக்கு காட்டிக்கொண்டே  எழுதியதும் ...
தெரியாத கேள்விக்கு கதை அடித்ததும் .....

மறக்க முடியுமா ....
மறக்க முடியுமா ....

வராண்டாவில் ஓடும் பொழுது
செயின் விழுந்து
தேடும் பொழுது தோழி எடுத்து தந்ததும் ...
சாக்பீஸ் எடுக்க போக கடையில் சாக்லேட் வாங்கி வந்ததும் ...
பிறந்த நாள் பரிசாய் ... அன்பை வாங்கி வந்ததும் ....
பிரார்த்தனை கூடத்தில் விருந்தினர்களுக்காக கால் வலிக்க நின்றதும் ...
அருட்பெருஞ்சோதியிலே உலகின் தனிப்பெருங்கருணையிலே பாடலும் ...
விளையாட்டு மைதானமும் ...
அங்கே நொண்டியடித்ததும் ...
பள்ளியில் இருந்து மைதானம் நடந்து போகும் வழியும் ...
அங்கே ஒரு தெருவில் சென்று தண்ணீர் பிடித்து குடித்ததும் ...

மறக்க முடியுமா ...
மறக்க முடியுமா .......

அண்ணாந்து துப்பிக்கொள்ளுங்கள் என்று சொல்லும்
நம் வகுப்பு கணித ஆசிரியரை மறக்க முடியுமா ...
பாடம் நடத்தும் பொழுது தான் நான் உங்கள் ஆசிரியை ...
மற்ற நேரங்களில்
நான் உங்கள் அம்மா ...தோழி என்று எப்படி வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும்
நம் சமூக அறிவியல் ஆசிரியை
அம்மா அவர்களை மறக்க முடியுமா ...
நான் முதன் முதலாக பள்ளி சேர்ந்த அன்று வகுப்பில் அவர்கள் தானே பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் ...
மஹாலட்சுமி போல் இருப்பார்கள் ...சுப்பு லட்சுமி ஆசிரியை ...
தமிழை தாராளமாக சொல்லித்தரும் எங்கள் தமிழ் அய்யா
பன்னீர் செல்வம் அய்யா ...
அறிவியலோடு பெண் பிள்ளைகள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை சொல்லும் எங்கள் அமுதா ஆசிரியை ...
பக்கத்து வகுப்பு என்றாலும் எங்களை அவர்கள் சொந்த பிள்ளையாகவே பார்க்கும் எங்கள் தமிழ் அம்மா விஜயலக்ஷ்மி ஆசிரியை ...
கணிதத்தை கற்கண்டாய் மாற்றும் எங்கள் நாராயணன் சார் ...
எப்பொழுதும் நகைச்சுவையாய் எளிமையாய் பாடம் நடத்தும் எங்கள் கணினி ஆசிரியர் ...
கொம்பை எடுத்துக்கொண்டு விசில் அடித்தபடி வரும் எங்கள் பீட்டி மேம் ...
நாங்கள் குடுகுடு  வென்று ஓடி வகுப்பறையில் அமர்ந்துகொள்வோம் ...
சில நேரங்களில் பக்கத்து வகுப்பறையில் அமர்ந்து விட்டு அவர்கள் போன பின் நான்கு அடி எடுத்து வைத்து எங்கள் வகுப்பறையில் நுழைந்து விடுவோம் ...
பக்கத்து வகுப்பறையிலும் எங்கள் தோழிகள் இருக்கிறார்களே ...
நாங்களும் அவர்களும் ஒன்றாக சில வகுப்புகள் பாடம் படிப்போம் ...
குட்டி குட்டி பசங்க எங்களோட தோழிகள் ...
அக்கா இதை பண்ணுங்க ...அக்கா அதை பண்ணுங்க ...
அக்கா நீங்க செம்மையா பதில் சொன்னீங்க ...மனதில் இருந்து வரும் மழலைகளின் வார்த்தைகள் ...
சிவப்பு பூக்கள் காற்றில் வந்து மேலே கொட்டுவதும் ...
மழை வரும் பொழுது வராண்டாவில் நின்று
கிளையை ஆட்டி மழையில் நனைவதும் ...
மொத்த பள்ளி போடும் சத்தமும் ...

மறக்க முடியுமா .....
மறக்க முடியுமா ....
மறக்க முடியுமா ......

எப்பொழுதும்
பசுமையான எந்தன் பள்ளி ...
பின்னாடி கேட் வழியா ஓடி வந்து வகுப்பறைக்கு வேக வேகமா ஆசிரியருக்கு முன்னாடி சென்று இடத்தில் அமர்வதும் ...
தோழிகளோடு சோறு பரிமாறி ஊட்டி விட்டு சாப்பிட்டதும் ...
எதிர்பாரா நேரத்தில்
என் தோழி கன்னத்தில் வைத்த முத்தத்தையும் ...
அவள் பாசத்தையும் .....
அவள் நட்பையும் ...செல்ல சண்டைகளையும் ...சின்ன சின்ன உரிமை கோபங்களையும் ...பின் இருவரும் பேசும் நாட்களையும்
மறக்க முடியுமா ...
மறக்க முடியுமா .....

வெகு நாட்கள் கழித்து
என்னை பார்த்த வேகத்தில்
ஆட்டோவில் இருந்து ஓடிவந்து
பின்னால் இருந்து கண்ணை பொத்தியதும்...
எனக்கே தெரியாது என்னை சரியாக தெரிந்து வைத்திருக்கும் எந்தன் தோழி ...
ஆனால் அதிகம் சண்டை போட்டுக்கொள்வோம் ...
எங்கள் சண்டை எல்லாமே எங்களின் பாசம் ....
சண்டை போட்டாலும் பிரிவே இல்லை ...சேர்ந்தே சண்டை போடுவோம் ...எவ்வளவு நாட்கள் ஆனாலும் ...மீண்டும் சேர்ந்து மீண்டும் சண்டை போடுவோம் ....எப்படி சண்டை வரும் என்றால் ...இப்ப சாப்பிடப்போறாயா இல்லையா பிரபா ...அப்புறம் சொல்லிக்கொடுக்கலாம் ...எவ்வளவு நேரம் தான் சாப்பிடாமல் இருப்பாய் என்று எனக்காகவே சாப்பிடாமல் இருப்பாள் ....எங்க குழுவில் எல்லோரும் சாப்பிட்டாலும் ....
எல்லோருக்கும் எங்களை பார்த்தால் பொறாமையே வந்துவிடும் ....என்னிடமும் கேட்டிருக்கிறார்கள் ...அவளிடமும் கேட்டிருக்கிறார்கள் ....
அது எப்படி எங்களால் முடியவில்லை ...நீங்கள் இருவரும் இவ்வளவு அன்பாக இருக்கிறீர்கள் ....
உங்கள் சண்டையில் கூட உங்கள் பாசம் தானே தெரிகிறது ....
அதற்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்றும் இல்லை ...ஒருவரை உண்மையாக நேசித்து விட்டால் அது உண்மையான நட்பாகிவிடும் ...
நட்பிற்கு உடலை பார்க்க தெரியாது ...உள்ளத்தை பார்க்க தெரியும் ...
அவள் முகத்தை பார்த்தே சொல்லிவிடுவேன் ...அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாளா ....சோகமாக இருக்கிறாளா என்று ...
ஒரு தாய்க்கு தெரியாதா அவள் மகளை ...
எனக்கு வலிக்கும் பொழுதெல்லாம் என்னை தாங்கிக்கொள்வாள் ...
அவள் மடியில் என் வலியை மறந்து உறங்கிடுவேன் ......
அவளே என் தோழி நந்தினி ....

மறக்க முடியுமா .....
மறக்க முடியுமா .....

அந்த பசுமையான நினைவுகளை எல்லாம் மறக்க முடியுமா என்ன ?

நாள் : 30-Jul-17, 4:44 pm

மேலே