ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள் உலகம் முழுமையும் உள்ள மலை...
ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
உலகம் முழுமையும் உள்ள மலை யாளிகள் சாதி, மத வித்தியாசம் இன்றிகொண்டாடும் ஒரே பண்டிகை ஓணத்திருநாள் ஆகும். இப்பண்டிகை அறு வடைத்திருநாள் ஆகவும், கலாச்சாரத் திருநாள் ஆகவும் அமைந்துள்ளது. அதை ஒட்டி அத்தப்பூ கோலமிட்டு, அன்றைய தினம் புத்தாடை அணிந்து, சுவையான சத்திய எனப்படும் அறுசுவை உண வருந்தி, மற்றவர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். அன்றைய விருந்து முழுமையாக சைவ உணவாக இருந்தாலும் அன்றைய உணவில் அவியல் மற்றும் விதவிதமான பிரதமன் என்றழைக்கப்படும் விதம்விதமான பாயசங்கள் இடம்பெறுவது சிறப்பு. முந்தைய காலத்தில் இதை ஒட்டிஓணப்பந்து எனும் இளைஞர்களுக்கான விளையாட்டும், ஓண ஊஞ்சல்எனும் பெண்களுக்கான விளையாட்டும் பிரசித்தம். தற்போதும் அதை ஒட்டிய குழுநாட்டியம்உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அற்புதமான காட்சி.வாமனனால் வதைக்கப்பட்ட மாவேலிமன்னர் பெற்ற வரம் அடிப்படையில் தன் நாட்டு மக்களை பார்க்க ஆண்டுக்கு ஒரு தடவை வருவதாகவும், அவரை வரவேற்கவே இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது என்பது ஐதீகம். ஆனால் இன்றைய சூழலில் கேரள மக் களும் விலைவாசி உயர்வாலும் ரப்பர் விலை வீழ்ச்சி போன்ற பிரச்சனைகளாலும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே மக்கள் மகிழ் வோடு ஓணத் திருநாளை கொண்டாடும் போதே மாற்றத்திற்கான பேராட்டங்களிலும் பெருமளவில் ஈடுபட்டு வருகின் றனர். அனைத்து மலையாளிகளுக்கும் ஓணத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.