எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்காலம் இந்தியத் துணைக்கண்டத்தின் இதய துடிப்பில் தனது துடிப்பையும்...

   

     எதிர்காலம்




இந்தியத் துணைக்கண்டத்தின் 

இதய துடிப்பில் 

தனது துடிப்பையும் 

இனணத்திருக்கிற

 இளைய சிந்தனையே!!

தெரிந்த பாதையை தெரி செய்!!

தெரியாத பாதையை ஆய்வு செய்!!!

இதுவரை நீ கடந்து வந்தது 

தெருமுனைதான்..

அடுத்துவருவதோ திருப்புமுனை...

எதுவும் உனக்கு தாண்டமுடியாத 

தடைகளுமில்லை!!

தாங்கமுடியாத சுமைகளுமில்லை!!!

பூக்கள் விழுந்து பூமி உடையாது..

ஈக்கள் மோதி இமயம் சாயாது.....
நீ.....
புதைப்பதற்காக                    
காத்திருக்கும் பிணமல்ல...
விதைப்பதற்காக 
            காத்திருக்கும் நிலம்.....

விழுந்தாலும் புத்தனுடைய 

பல்லாக விழ வேண்டும்.....

எழுந்தாலும் சித்தனுடைய
       
சொல்லாக எழ வேண்டும்.....

திணையளவு தீமை அறியாதே..

மலையளவில் மானம் குறையாதே....

புகழ் என்பது இருக்கும் போது 

பெறுவது அல்ல.....

இல்லாத போது வருவது......

தொட்டு விடாதே ......
தொட்டால் விட்டு விடாதே...

முட்டிப்பார் எதிர்வரும் நூற்றாண்டு

உன்னுடையதாய் இருக்கட்டும்.....

      -என்றென்றும் அன்புடன்.....
                
      





பதிவு : pongovindh
நாள் : 1-Sep-17, 5:55 pm

மேலே