நிறம் எதிர்த்த வீட்டு கருப்புசாமியில் தொடங்கி நாம் வணங்கும்...
நிறம்
எதிர்த்த வீட்டு கருப்புசாமியில் தொடங்கி நாம் வணங்கும் கருப்பசாமி வரை அனைவரும் கருப்பு தானே..............
எப்பொழுது தொடங்கியது நம்மிடையே இந்த நிற வேறுபாடு ? குருதியும் சதையும் ஒன்றாய் போர்த்தப்பட்ட போர்வையின் நிறம் கருப்பு என்பதை மறந்துவிடாதே...............
எதிர்கால சந்ததி கருப்பாக இருந்துவிடக்கூடாது என்று என்னும் உனக்கு ஏன் புரியவில்லை ,நீ மாற்ற நினைப்பது நிறத்தை அல்ல உன் இனத்தின் அடையாளத்தை என்று மறந்துவிடாதே....
மழை வரும் முன்பு தோன்றும் அழகிய கார்மேகத்தை ரசிக்கும் மனமுள்ள நீ, மனிதனின் நிறம் கொண்டு நிராகரிப்பது சரியா?
நிலவின் அழகை எடுத்துக்காட்டுவதே கார்மேகங்கள் தான் ஆனால் காலையில் கார்மேகம் மறைந்ததும் நிலா இடம் தெரியாமல் போய்விடுகிறதே!!!
ஒரு இனத்தை அழித்தது போதும் இனத்தின் அடையாளத்தையும் அழித்து விட வேண்டாம்........