எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாறுவோம் மாற்றிடுவோம் ----------------------------------------------- வழக்கம் போல இன்று மாலை...

  மாறுவோம் மாற்றிடுவோம்
-----------------------------------------------  

வழக்கம் போல இன்று மாலை வீதி உலா ( walking) சென்று கொண்டிருந்தேன். பக்கத்து தெருவை கடக்கும் போது சற்றென்று எனது கவனத்தை கவர்ந்தது. நின்று படம் பிடித்தேன். சாதாரணமாக எல்லா தெருக்களில் நாய்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆங்காங்கே தனி தனியாக படுத்துக் கொண்டிருக்கும். அவைகளை எல்லாம் பார்க்கும்போது மிகவும் மனம் வருந்தி உள்ளேன்.

ஆனால் இன்று கண்டது ஆறு நாய்கள் ஒரே இடத்தில் அருகருகே படுத்துக் கொண்டு இருந்தன. உடனே போன் மூலம் கிளிக் செய்தேன்.பாவம் எங்கோ யாருக்கோ பிறந்த வாயில்லா இந்த ஜீவன்கள் இங்கே வந்து அனாதையாக காட்சி அளிப்பது மிகவும் வேதனையும் கவலையும் பிறந்தது.

இதேபோல தான் அனாதையாக வாழும் மனிதர்களின் நிலையும். இதயம் கனத்தது. இவர்கள் அனைவரும் என்று தான் வாழ்க்கையில் ஒரு வீட்டில் படுத்து உறங்கும் காலமும் வந்திடுமா என்று ஏக்கமும் ஆசையும் உள்ளத்தில் சுழன்றது .      

வீதியில் வாழும் அனைத்து ஜீவன்களுக்கும் எப்படி உணவு கிடைக்கும் அடிப்படை தேவைகள் அவர்கள் பெறத்தான் வழி உண்டா என கேள்விக் கணைகள் நெஞ்சில் துளைத்து கொண்டே இருக்கும்.

மனிதரை தத்தெடுப்பதே குறைந்துவிட்ட இந்த காலத்தில் நாய்கள் பற்றி யார்தான்  கவலைப்பட்டு முன்நின்று எடுத்து செய்வார்.அப்படி என்றால் அவர்களின் நிலை என்ன வாழ்க்கை எப்போது மாறும்..... இது எனது உள்ளத்தை பிழிகிறது.


மாற்றம் என்பது அவசியம் தேவைப்படுகிறது. அனைத்து மட்டங்களிலும் துறைகளிலும் மட்டுமல்ல ..... அனைவரின் நெஞ்சத்திலும்.

மாறுவோம் மாற்றிடுவோம் நம்மால் முடிந்த வரை.


பழனி குமார் 
31.10.2017  

நாள் : 31-Oct-17, 10:33 pm

மேலே