எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 43 --------------------------------------- நண்பர்கள் நாலுபேர்...

  அனுபவத்தின் குரல் - 43
---------------------------------------


நண்பர்கள் நாலுபேர் இணைந்து இருக்கும் போது அவர்களில் அனைவருமே ஒரே சமநிலை என்று கூறமுடியாது . சாதி மதத்தை தவிர்த்திடுங்கள் ,காரணம் நட்பு  என்று வந்துவிட்டால் அங்கு சாதி மதம் மொழி என்று எவருமே யோசிப்பதில்லை .அவர்களை இணைப்பதே நட்பு எனும் உறவுதான் .

நிச்சயம் அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரிவினை சார்ந்தவர்களாகத் தான் இருப்பார்கள் .அவர்கள் அனைத்தையும் மறந்து ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவர் . வீட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் . அங்கே சாதி மதம் எல்லாம் மறைந்து நட்பு என்ற உறவே உள்ளங்களை இணைக்கும் . 

அது மட்டுமன்றி ஒவ்வொருவரும் மற்றவர்களின் சுகத்திலும் துயரத்திலும் பங்கு பெறுவர் . அதுதான் நட்பின் சிறப்பு .சில நேரங்களில் , சில வேளைகளில் உண்மையில் உறவுகளை விட நமக்கு உடனடியாக உதவுபவர்க்ள 
அறுதியிட்டுக் கூற முடியும் நண்பர்கள்தான் . இதை யாரும் மறுக்க முடியாது . பலருக்கு அவர்களுக்கு ஏற்பட்ட சில அனுபவங்களில் இருந்தே புரிந்திருப்பர்.ஆகவே புதிதாக நட்புகள் கூடவில்லை என்ற ஆதங்கம் உறுப்பின் அதனை விடுத்து , தற்போதுள்ள நட்பு வட்டம் சிறிதும் சிதறாமல் குறையாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் .சில நேரங்களில் நட்பிற்குள்ளும் பிரிதல் நேர்ந்தால் அது அவரவர் சூழ்நிலையும் காலநிலையும், அவர்களுக்குள் புரிதல் இல்லாமல் போவதும் காரணங்களாகும் .

எனது அனுபவத்தில் நான் புரிந்துக்கொண்ட உண்மை இது .


பழனி குமார்   

நாள் : 6-Dec-17, 10:06 pm

மேலே